சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சிம்பு..

sivakarthikeyan-simbu

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியானது ‘ரெமோ’. பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் ஒரு தனியார் ஓட்டலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது படக்குழு.

இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ‘ எங்களை சில பேர் வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும். எங்களது படம் நன்றாக இல்லை என்றால் அதை கூறுங்கள், அதை விட்டுவிட்டு வேலையை தடுக்க நினைக்காதீர்கள்.’ என்று தனக்கு தொல்லை கொடுத்தவர்களை பற்றி பேசி கண்ணீர் வடித்தார் சிவகார்த்திகேயன்.

இதற்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சிம்பு கூறியதாவது,’ இதற்காக கவலை கொள்ள வேண்டாம் சிவா. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் யார் என்பதை நானும் அறிவேன். அவர்கள் தொல்லை கொடுப்பதும் ஒரு வகையில் நல்லதே. அவர்கள் கொடுக்கும் தொல்லைகளால் தான் நான் கடுமையாக உழைக்க முடியும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று கூறியுள்ளார்.

இதை ஆதரித்து நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனியும் ட்விட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *