நிதி இடைவெளியைக் குறைக்க ஆன்லைன் சேவைகளை முடுக்குகிறது ஸ்ரீராம்- வியாபார்

சென்னை: 2012 அக்டோபர் 18: இந்தியாவின் முன்னணி வணிக்க குழுமங்களுள் ஒன்றான ஸ்ரீராம் தனது புத்தம் புதிய ‘ஸ்ரீராம் வியாபார்’ முனைவை இன்று அறிமுகப்படுத்தியது. ரியல் எஸ்டேட், வாகனம், போக்குவரத்து, கடன் ஆலோசனை, காப்பீடு மற்றும் வசூல்களுக்கு ஸ்ரீராம் வியாபார் ஒரு வரப்பிரசாதமெனில் மிகையில்லை. இந்த வணிக மாதிரி வித்யாசமானது. கணினி வழி இணைக்கப்படாத இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளின் டிஜிடல் மற்றும் நிதி இடைவெளியைக் குறைக்கத் தனது ‘அண்மை முகவர் வணிக மாதிரி’ வலைப்பணி மூலம் இசிசிஎஸ் (எளிது, வாய்ப்பு, வசதி, எளிமை) ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

ஸ்ரீராம் வியாபார் முனைவைப் பிரபல பின்னணி பாடகர் திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்படு வாரியத் தேர்வுக் குழுத் தலைவர் திரு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முன்னிலையில் தொடங்கி வைத்தார். ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் திரு ஏ வி எஸ் ராஜா, மா ஃபா ஸ்ட்ராடெஜிக் கன்சல்டண்ட்ஸ் இயக்குனர் திரு கே பாண்டியராஜன் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஓய்வு பெற்ற முதன்மைப் பொது மேலாளர் திரு சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்ரீராம் வியாபார் முதன்மைச் செயல் அதிகாரி திரு சுதாகர் ராஜா பேசுகையில் ‘ஸ்ரீராம் வியாபார் வாடிக்கையாளர் முதலீட்டிற்கு முழுமையான மதிப்பை வழங்குவதை நோக்கமாக்க் கொண்டு செயல்படும். இன்றைக்கு வாடிக்கையாளர் எந்தப் பொருளையும் சேவையையும் ஆன்லைன் மூலம் பெறலாம். ஆனல் கோடிக்கணக்கான சாதாரண மக்களுக்கு இந்த வசதியில்லை. எனவே ஸ்ரீராம் வியாபார் இந்த டிஜிடல் மற்றும் நிதி இடைவெளியைக் குறைக்க எங்கள் முகவர் வலைப்பணி மூலம் ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இசிசிஎஸ் (எளிது, வாய்ப்பு, வசதி, எளிமை) ஆன்லைன் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்’ என்றார்.

ஸ்ரீராம வியாபார் வணிக மாதிரி குறித்து ஸ்ரீராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் திரு ஏ வி எஸ் ராஜா கூறுகையில் ‘எங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து வணிக முனைவுகளுக்கும் தேவையான மதிப்புமிக்க சேவைகளை ஸ்ரீராம் குழுமம் வழங்கி வருகிறது. அந்த வகையிலே ஸ்ரீராம் வியாபார் மற்றுமொரு மதிப்புள்ள சேவையாகும். இந்தியாவிலுள்ள அடித்தட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்த எங்கள் புரிதல் ஈடு இணையற்றது என்பதால் கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வணிக உருவாக்கம் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளோம். ‘இணைய வசதியில்லாத 90% இந்திய மக்களுக்கு இணையத்தின் பலனை வழங்கினால் மட்டுமே ‘இந்தியா வெற்றி பெற’ முடியும்’ என்றார்.
மா ஃபா ஸ்ட்ராடெஜிக் கன்சல்டண்ட்ஸ் இயக்குனர் திரு கே பாண்டியராஜன் தொடர்கையில் ‘ஸ்ரீராம் வியாபார் வணிக மாதிரி இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாகத் திகழும். ஆயிரக் கணக்கான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களை உருவாக்குவதுடன் அவர்களை நாடு தழுவிய முகவர்களாகவும் மாற்றும்’ என்றார்.

ஸ்ரீராம் வியாபார்

ஸ்ரீராம் குழுமத்தின் மற்றொரு முனைவு ஸ்ரீராம் வியாபார் ஆகும். ‘பொது மக்களிடம் விற்பனை செய்யும் கோட்பாட்டில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ரியல் எஸ்டேட், வாகனம், கடன், போக்குவரத்து, காப்பீடு, வசூல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வாங்குவோர் மற்றும் விற்போரின் விவரங்களுடன் முழுமையான தீர்வை ஸ்ரீராம் வியாபார் வழங்குகிறது. கணினி வழி இணைக்கப்படாத இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளின் டிஜிடல் மற்றும் நிதி இடைவெளியைக் குறைக்கத் தனது ‘அண்மை முகவர் வணிக மாதிரி’ வலைப்பணி மூலம் இசிசிஎஸ் (எளிது, வாய்ப்பு, வசதி, எளிமை) ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு: சதீஷ் குமார், கணக்கியல் மேலாளர் கைபேசி 91 9840629989 மின் அஞ்சல் sathish@bluelotuspr.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *