எதிர்பார்ப்பின் உச்சத்தை எட்ட வைத்த சன்னிலியோனின் படத்தலைப்பு!

கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படத்தின் தலைப்பை யூகித்து சரியாக சொல்லும் ரசிகர்கள் பட பூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது.

இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தலைப்பை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *