’எஸ் 3’ அப்டேட்: சூர்யாவோடு இணையும் ராதிகா சரத்குமார்….

Singam-3-to-start-from-Jan-7
சிங்கம் 2வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஹரியோடு மீண்டும் கைகோர்த்திருக்கிறார் சூர்யா. சிங்கம் படத்தின் மூன்றாம் பகுதியாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு ‘எஸ் 3’.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். மேலும், ராதிகா சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் மலேசியாவில் துவங்க இருக்கிறது. முக்கியமான சண்டைக்காட்சி அங்கு படமாக்கப்பட இருக்கிறது. மொத்தம் 9 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *