Tag: இருமுகன்

முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘இருமுகன்’… தொடர்ந்து முதலிடம்…!!

முன்னணி நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘இருமுகன்’… தொடர்ந்து முதலிடம்…!!

News
விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்தது ‘இருமுகன்’. படம் வெளியான போது கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படத்திற்கு பிறகு வெளியானது தனுஷின் ‘தொடரி’, விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ வெளியானது. தொடரி மற்றும் ஆண்டவன் கட்டளையின் வசூல் முதல் மூன்று நாட்களில் வசூலை மிரட்டினாலும், அதன் பின் வசூலில் பெரிய ஏமாற்றமே இருந்தது. இந்த இரு படங்களின் வசூலையும் பின்னுக்குத் தள்ளி மீண்டும் இருமுகனே முதலிடத்தில் வந்தது. இருமுகன் சென்னையில் மட்டுமே சுமார் 5.6 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது. தனுஷின் தொடரி இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 2.6 கோடி வரை வசூல் செய்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’ இதுவரை 2.01 கோடி வசூலை குவித்துள்ளது. தொடர்ந்து முதலிடத்தில் விக்ரமின் இருமுகன் மிரட்டி வசூல் சாதனையில் புதிய சரித்திரம் படைட்த்து வருகிறது..
வசூலில் தொடர்ந்து மிரட்டும் விக்ரமின் ‘இருமுகன்’… முழு வசூல் விபரம் இதோ..

வசூலில் தொடர்ந்து மிரட்டும் விக்ரமின் ‘இருமுகன்’… முழு வசூல் விபரம் இதோ..

News
விக்ரம் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளிவந்தது ‘இருமுகன்’. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விக்ரமின் அதிக எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. வசூலை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் அதிகப்படியான ஓபனிங் வசூலை வாரிக் குவித்ததில் இருமுகன் மூன்றாவது இடத்தில் உள்ளதாம். சென்னையில் மட்டும் இதுவரை 4.6 கோடி வரையில் வசூலை வாரிக்குவித்துள்ளாது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 23 திரையாரங்குகளில் சுமார் 273 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. 90 சதவீத பார்வையாளர்களால் நிரம்பி வழிந்துள்ளது இருமுகன்.. உலகம் முழுவதும் இதுவரை சுமார் 100 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
இருமுகன் – விமர்சனம்

இருமுகன் – விமர்சனம்

Reviews
ஷங்கரின் ‘ஐ’, பத்து எண்றதுக்குள்ள என சில சறுக்கலுக்குப் பிறகு சிறிய பிரம்மாண்டமாய் தனது இருமுகனை கையில் எடுத்திருக்கிறார் விக்ரம். ஏ ஆர் முருகதாஸின் பட்டறையில் இருந்து வந்து ‘அரிமா நம்பி’ என்ற வெற்றி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இருமுகன் விக்ரமின் வாழ்க்கையில் இறங்குமுகமா?? அல்லது ஏறுமுகமா?? என்று இந்த விமர்சனம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.... மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை 70 வயது முதியவர் தனி ஒருவனாக நின்று அதை துவம்சம் செய்து விடுகிறார். இவருக்குள் எப்படி இவ்வளவு பெரிய பலம் வந்தது என ஆராய்கையில் காரணம் ‘லவ்’ என தெரிகிறது. இப்படத்தின் வில்லன் பெயர் தான் ‘லவ்’. மனைவி இழந்த சோகத்தில் இருக்கும் ’ரா’ பிரிவு போலீஸ் அதிகாரி விக்ரமிடம் இந்த வழக்கை ஒப்படைக்கிறது இந்தியன் போலீஸ். பின், தனது உதவியாளர் நித்யா மேனனுடன் மலேசியா செல்கிறார் விக்ரம். ஒருவ
விக்ரமின் இருமுகன் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!!

விக்ரமின் இருமுகன் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..!!

News
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வருகிறது ‘இருமுகன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றது. வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், தேதியில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாதலால் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி படத்தினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
தன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர காத்திருக்கும் விக்ரம்..!!

தன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தர காத்திருக்கும் விக்ரம்..!!

News
சீயான் விக்ரம் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் “இருமுகன்” என்னும் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களுக்கிடயே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இசை வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் நிவின் பாலி இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். படத்தின் இசை மட்டும் வெளிவரும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து அளிக்கும் விதமாக படத்தின் டிரைலரையும் அன்றே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
நாளை விக்ரமின் ”இருமுகன்” டீசர்..??

நாளை விக்ரமின் ”இருமுகன்” டீசர்..??

News
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகி வருகிறது இருமுகன். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இப்படத்தினை தயாரித்து வருகிறார் ஷீபு தமீன்ஸ். நாளை விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இருமுகன் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இப்படத்தின் டீசர் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறதாம். மே மாதம் 10 ஆம் தேதியுடன் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைகிறது. ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.