Tag: ஏகே 57

வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்த தல ’அஜித்’..!!

வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்த தல ’அஜித்’..!!

News
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் கிங் என்றால் அது அஜித் தான். படத்தின் முதல் நாளிலே தெரிந்து இவருக்கு மாஸ் எப்படி இருக்கும் என்று. அந்த அளவிற்கு ரசிகர்கள் இவரை தலை தூக்கி கொண்டாடிவிடுவார்கள். கடைசியாக வந்த வேதாளம் படத்தினை முதற்கொண்டு. தமிழகத்தில் வேதாளம் படத்தினை 33 கோடி விலை கொடுத்து ஒரு பிரபல நிறுவனம் கைப்பற்றியது. ஆனால், வசூலோ மும்மடங்கிற்கும் மேலாக அள்ளியது. தற்போது அஜித் நடித்துவரும் ‘ஏகே 57’ படத்தினையும் இதே நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளதாம். இப்படத்தினை தமிழகத்தில் மட்டும் வெளியிட சுமார் 40 கோடி வரை விலை பேசப்பட்டுள்ளதாம். மீண்டும் வசூலில் தான் யார் என்பதை அஜித் நிச்சயம் இந்த படத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவார். எப்படியும் தமிழகத்தில் இந்நிறுவனம் அதிக திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடும் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாக
’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘தல 57’. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிப்பதை பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது, ‘ இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் அஜித் சார் உடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிவா சார் இயக்கத்தில் அவருட பணி புரிவது மேலும் மகிழ்ச்சி தான். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது தான். இப்போதைக்கு இதுவரை தான் என்னால் கூற முடியும்.” என்று கூறினார்.
அடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் அஜித்… ரசிகர்களை உற்சாகம்…

அடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் அஜித்… ரசிகர்களை உற்சாகம்…

News
தல அஜித்குமார் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியா பகுதியில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் அஜித்குமாரின் வெறித்தனமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் இயக்குநர் சிவா. அந்த புகைப்படம் இணையத்தையே கலங்கடித்தது. இதன் அடுத்த படியாக அஜித்குமார் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரேஸ் பைக்கினை எடுத்துக் கொண்டு தனது வீர சாகசத்தை அங்கு நடத்தி வருகிறாராம் அஜித்..
இணையத்தை அதிர வைத்த தல ரசிகர்கள்..!!

இணையத்தை அதிர வைத்த தல ரசிகர்கள்..!!

News
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘ஏ கே 57’. படத்தின் படப்பிடிப்பு மூன்றாவது கட்டமாக பல்கேரியா பகுதிகளில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று முன்தினம் அஜித்தின் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்தார் இயக்குநர் சிவா. ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக அந்த புகைப்படத்தை எடுத்து ட்விட்டரில் டேக் கிரியேட் செய்து அதை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விட்டனர் அஜித் ரசிகர்கள். மேலும், பல இடங்களில் அந்த புகைப்படத்தை வைத்து பேனர்களும் அடித்து விட்டனர். நட்சத்திரங்கள் பலரும் அவரது புகைப்படத்தை வெளியிட்டு தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு புகைப்படம் வெளிவந்ததற்கே இந்த கொண்டாட்டம் என்றால், படம் வெளியாகும் போது சொல்லவா வேண்டும்....
அஜித் சாரோடு நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – அக்‌ஷராஹாசன்…

அஜித் சாரோடு நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – அக்‌ஷராஹாசன்…

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 57’ல் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா சென்றுள்ளனர். இந்த படப்பிடிப்பில் நடிகை அக்‌ஷராஹாசனும் கலந்து கொள்ளவிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ’அஜித் சார் ஒரு சிறப்பான நடிகர், மேலும், அவருடன் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷடம்.’ என்று கூறியுள்ளார். மேலும், இயக்குநர் சிவா வேதாளம் படத்திற்கு அடுத்த ஒரு சாதனை படத்தை இயக்குவார்’ என்றும் அக்‌ஷராஹாசன் கூறியுள்ளார்.
இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

News
தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இவர் ஏற்கனவே இந்த படத்திற்கான தீம் மியூசிக்கை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார் அஜித்திடம். அதன்பின் இரவு பகலாக இந்த படத்திற்கான பாடல்களை இசையமைத்து வந்தார் அனிருத். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கான இசையையும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல்களை கேட்ட அஜித்தும் மகிழ்ச்சியில் உள்ளாராம். வேதாளம் படத்தில் இடம் பெறும் மிரட்டலான பாடல்களை தான் இந்த படத்திலும் கொடுத்துள்ளாராம்.
அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
”தன் ரசிகர்களுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு”… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

”தன் ரசிகர்களுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு”… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தினை சதய் ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தினை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என படத்தின் தயாரிப்பாளர் கூறினார். கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியானது ‘வேதாளம்’. இந்த வருடம் அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. பண்டிகை தினத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அஜித் எண்ணுகிறாராம். அதற்காக வரும் பொங்கல் தினத்தில் ‘ஏகே 57’ படத்தினை வெளியிட வேண்டும் என்று அஜித் கட்டளை பிறப்பித்திருக்கிறாராம். இதற்காக தான் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறதாம். தனது ரசிகர்களை பண்டிகை தினத்தை சிறப்பாக கொண்டாட அஜித் இந்த முடிவை எடுத்துள்ளாராம். அத
அஜித்தின் ‘ஏகே 57’: அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே..???

அஜித்தின் ‘ஏகே 57’: அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே..???

News
அஜித் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏகே 57’. இப்ப்டத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் ஆரம்பமானது. ஐரோப்பா பகுதியில் உள்ள ஆஸ்த்ரியா மகாணத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இங்கு முக்கியமான சண்டைக் காட்சி மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அங்கு படப்பிடிப்பினை முடித்த படக்குழுவினர் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளனர். இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கின்றனர். அங்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.
’தல 57’: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு..!!

’தல 57’: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு..!!

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆஸ்த்ரியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். ரசிகர்கள் பல கோணங்களில் படத்திற்கு டைட்டில் வைத்து அழகு பார்த்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் டைட்டில் ‘துருவன்’ என முடிவாகிவிட்டதாக இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அநேக பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி பரவியது. இதனால் படத்தின் தயாரிப்பு தரப்பு சத்ய ஜோதி நிறுவனம் சார்பாக டி.ஜி.தியாகராஜன் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அதிகாரப்பூர்வமான டைட்டில் வைக்கும் வரை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.