Tag: தளபதி

மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

மெர்சல் படத்தின் அதீத சாதனை….. காத்திருக்கும் ரசிகர்கள்!

News
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் வெளியாகுமா ஆகாதா என பலர் காத்திருக்க, ரசிகர்கள் படம் நிச்சயம் வெளிவரும் என தங்கள் பணிகளை மிகவும் மும்முரமாக செய்து வருகின்றனர். கட் அவுட், டிஜிட்டல் பேனர்கள் என திரையரங்கை மறைக்கும் அளவிற்கு தமிழகத்தின் அநேக திரையரங்குகள் தற்போது விஜய் ரசிகர்களின் வசம் தான் என்று கூறினால் அது மிகையாகாது. சுமார் 140 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசூலில் நிச்சயம் இப்படம் புது சாதனை படைக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. விஜய் என்ற ஒரு நடிகனுக்கு மட்டுமே படத்தின் வியாபாரம் தூள் தூளாகி விடும். படத்தினை தேணாண்டாள் நிறுவனமே தமிழ்நாடு முழுவதும் வெளியிட போகிறது. செலவுக்கு ஏற்ப மெர்சல் படத்தை வியாபாரம் செய்ய முடியாது என்பதால் தயாரிப்பு தரப்பு தமிழ்நாடு முழுவதும் வினியோக முறையில் மெர்சல் வியாப
இரவோடு இரவாக சென்னையை மெர்சலாக்கிய தளபதி ரசிகர்கள்!

இரவோடு இரவாக சென்னையை மெர்சலாக்கிய தளபதி ரசிகர்கள்!

News
நடிகர் விஜய் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை விஜய்யிடம் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். ரசிகர்களுக்கு மேலும் இனிப்பூட்டும் விதமாக விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. இது அவரது ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. தளபதி விஜய்யை வாழ்த்தி சென்னை நகர் முழுவதும் போஸ்டர்களும், பேனர்களும் அளவுக்கு அதிகமாக ஓட்டப்பட்டுள்ளன. எந்த வருடமும் இல்லாத ஒரு பிரம்மாண்ட வாழ்த்து இந்த பிறந்த நாளில் ரசிகர்கள் அரங்கேற்றி உள்ளனர். இரவு 12 மணி முதலே தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் வெடி வெடித்தும், கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். மேலும், பல திரையரங்குகளில் விஜய்யின் ஹிட் படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.
’விஜய் 62’ஐ ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லையாம்.. அப்போ..??

’விஜய் 62’ஐ ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லையாம்.. அப்போ..??

News
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை முடித்து விஜய் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸோடு இணையவிருக்கிறார் என்ற தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. ஆனால், ‘விஜய் 62’ படத்தை இயக்கும் வாய்ப்பை ஏ ஆர் முருகதாஸ் பெறவில்லையாம்.ஆம்... மாற்றாக ‘விஜய் 63’ படத்தை இயக்கும் வாய்ப்பை தான் ஏ ஆர் பெற்றுள்ளாராம். அப்போ, விஜய் 62 படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு வழங்கப்போகிறார் விஜய் என அனைவரிடமும் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இயக்குனர் செல்வராகவனிடம் ஒரு கதையை விஜய் கேட்டுள்ளதாகவும் அநேகமாக அவருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
’பைரவா’ திருவிழா: மதுரையை தெறிக்க விடும் ’தளபதி’ ரசிகர்கள்…

’பைரவா’ திருவிழா: மதுரையை தெறிக்க விடும் ’தளபதி’ ரசிகர்கள்…

News
விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பைரவா’. வரும் வியாழன் முதல் உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் தங்களின் கொண்டாட்டத்தை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். பல இடங்களில் மிகவும் உயரமான கட்-அவுட்டுகள் வைத்து பைரவா திருவிழாவை ஆரம்பித்துவிட்டார்கள். படத்தின் டிக்கெட்டுகள் வெளியான சில மணித்துளிகளில் அனைத்தும் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. படத்தின் வசூலும் விண்ணை முட்டும் என்கிறது தயாரிப்பு தரப்பு. மதுரை மாவட்டத்தில் உள்ள தளபதி ரசிகர்கள் பல அடி உயரத்தில் கட்-அவுட்டுகளை வைத்து பைரவாவை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுக்கான மாஸ் காட்சிகள் படத்தில் நிறைய இடங்களில் இருப்பதாக படத்தின் இயக்குனர் பரதன் கூறியுள்ளார்.
உருவாகிறது ’விஜய் ப்ரொடக்‌ஷன்ஸ்’… ‘விஜய் 62’ இயக்குனர் இவர் தான்…ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

உருவாகிறது ’விஜய் ப்ரொடக்‌ஷன்ஸ்’… ‘விஜய் 62’ இயக்குனர் இவர் தான்…ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

News
விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவான ‘பைரவா’ வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய்யின் அடுத்த படத்தினை அட்லீ இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தினை ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளிவந்துள்ளது. என்னவென்றால். விஜய்யின் 62வது படத்தினை விஜய்யின் வெற்றி இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளாராம். இந்த படத்தினை விஜய் தனது சொந்த கம்பெனி மூலமாக தயாரிக்கவிருக்கிறாராம். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..??

’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..??

News
விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைரவா’ வரும் பொங்கல் தின விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் சில தினங்களில் சென்னை திரும்பவுள்ளார். அதன் பிறகு, அட்லீயுடனான அடுத்த படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். தெறி படத்தில் இருவருடனான காதல் காட்சிகள் அதிகமாக பேசப்பட்டுள்ளதால் மீண்டும் இந்த கூட்டணியை சாத்தியமாக்கியுள்ளார் விஜய்..
‘விஜய் 61’ல் இணைந்த தெறி பிரபலம்…

‘விஜய் 61’ல் இணைந்த தெறி பிரபலம்…

News
இளைய தளபதி விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ளது ‘பைரவா’. வரும் பொங்கல் தினத்தை மையம் கொண்டி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அட்லீ. தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தந்த அட்லீயிடமே தனது அடுத்த படத்தினையும் கொடுத்துள்ளார் விஜய். இந்நிலையில் தெறி படத்தில் பணியாற்றிய ஒரு பிரபலம் இப்படத்திலும் இணையவுள்ளார். அவர் வேறுயாருமில்லை, தெறி படத்தில் எடிட்டராக பணியாற்றிய அந்தோணி எல்.ரூபன் அட்லீ விஜய்யுடன் ’விஜய் 61’லும் இணைந்துள்ளார். தெறி படத்தின் வெற்றிக்கு எடிட்டிங்கும் ஒரு முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவிருப்பதால் லொகேஷன் பார்ப்பதற்காக அட்லீ அன் கோ விரைவில் அமெரிக்கா பயணம் செல்லவிருக்கிறது.
ரசிகர்களை நினைத்து கண்கலங்கிய விஜய்…

ரசிகர்களை நினைத்து கண்கலங்கிய விஜய்…

News
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் முழு படத்தினையும் முடிக்கவுள்ளது படக்குழு. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்த படத்தில் காமெடியனாக சதீஷ் நடித்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் தனது ரசிகர்களை பற்றி பல விஷயங்களை சதீஷிடம் பகிர்ந்து கொள்வாராம். விஜய் கூறியதாவது ’நமது சுகதுக்கங்களில் சொந்தக்கரங்க பங்கெடுக்கிறது பெரிய விஷயம் இல்ல. ஏன்னா, அவங்க நம்ம சொந்தம். அதே மாதிரி நமக்கு ஒண்ணுன்னா துடிச்சி போய் நண்பர்கள் வர்றதும் பெரிய விஷயம் இல்லை, ஏன்னா.. அவன் நம்ம நண்பன். ஆனா, ரத்தசொந்தம் எதுவும் இல்லாம, நாம அழுதா அழுறதுக்கும் சிரிச்சா சிரிக்கறதுக்கும் இருக்கற
அஜித் பட இயக்குனருக்கு விருந்து படைத்த விஜய்…

அஜித் பட இயக்குனருக்கு விருந்து படைத்த விஜய்…

News
அஜித் வாழ்க்கையில் தனது திரைப்பயணத்தை திருப்பி போட்ட படம் தான் ‘மங்காத்தா’. இந்த படத்தினை இயக்கியிருந்தார் வெங்கட் பிரபு. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை - 28’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார் வெங்கட் பிரபு. அப்போது பேசிய வெங்கட் பிரபு மங்காத்தா படத்தினை விஜய் பார்த்து ஒரு நாள் என்னை அழைத்து அவரது வீட்டில் விருந்து படைத்தார். மேலும், பிரேம்ஜிக்கு பல அறிவுரைகளை வழங்கியுள்ளார் விஜய். அண்ணன் இயக்கத்தில் மட்டும் நடிக்காமல் பல இயக்குனர்களின் இயக்கத்திலும் நடிக்க வேண்டும் எனவும் பிரேம்ஜியிடம் கூறியுள்ளார் விஜய். அஜித் நடித்து வெற்றி பெற்ற ஒரு படத்திற்காக விஜய் என்னை அழைத்து விருந்து கொடுத்தது, மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம் என்று வெங்கட்பிரபு நெகிழ்ந்து பேசியுள்ளார். அப்போது ரஜினி-கமல் நட்பி
விஜய் படங்களில் இது வித்தியாசமானது – ‘பைரவா’ குறித்து சுகுமார்…!!

விஜய் படங்களில் இது வித்தியாசமானது – ‘பைரவா’ குறித்து சுகுமார்…!!

News
விஜய் நடிக்க பரதன் இயக்கத்தில் மிக வேகமாக வளர்ந்து ’பைரவா’. படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா’சுகுமார்’ ப்ரதேயக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘இதுவரை வந்த படங்களிலே இது கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். விஜய் படங்கள் என்றாலே நடனமும், பாடல்களும் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கும். மற்ற படத்தினை காட்டிலும் பாடல்களும், நடனமும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் விஜய் மிகவும் அதிகமாக மிரட்டியுள்ளார்’. என்று கூறியுள்ளார்.