Tag: A K 57

விவேகம்: வில்லனுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்…

விவேகம்: வில்லனுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்…

News
சில தினங்களுக்கு முன் வெளியானது அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். இந்த போஸ்டர் தல ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டரை திரை நட்சத்திரங்கள் பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கியமான சண்டைக் காட்சிகள் விரைவில் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள MGR Film சிட்டியில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தான் படத்தின் வில்லனாக வரும் விவேக் ஓபராயுடனான சண்டைக் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம். படத்தில் மிகவும் முக்கியமான சண்டைக்காட்சி இது என்பதால் பலத்த பாதுகாப்புடன் இந்த காட்சி எடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

News
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட மற்ற கடைசி படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவருக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜல் அகர்வாலுடன் அஜித்திற்கு நிறைய ரொமண்டிக் காட்சிகளை வைத்திருந்தாராம் சிவா. ஆனால், தன் ரசிகர்கள் ரொமன்ஸ் காட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்காக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெறட்டும். அதை தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.’ என்று அஜித் சிவாவிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம்.
‘ஏகே 57’ல் ஒரு வெறி கொண்டு தான் வேலை செய்கிறோம் – அனிருத்..

‘ஏகே 57’ல் ஒரு வெறி கொண்டு தான் வேலை செய்கிறோம் – அனிருத்..

News
வேதாளம் என்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் அஜித் நடிக்க சிவா இயக்க உருவாகி வருகிறது ‘ஏ கே 57’. இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அனிருத். அப்போது ‘ஏகே 57’ படத்தினை பற்றி கூறுமாறு ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்து பேசிய அனிருத், ’இந்த படத்தின் ஆல்பம், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு வெறி கொண்டு தான் இந்த வேலையை செய்து வருகிறோம். வேதாளம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு வெறி இருக்கிறது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும். என்னோட அடுத்த ஆடியோ ரிலீஸ் ‘ஏகே 57’ தான்.’ என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்..
அஜித்தின் ‘ஏகே 57’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு..!!

அஜித்தின் ‘ஏகே 57’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு..!!

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏ கே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றது, இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற்றது. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா செல்லவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதுவும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. வரும் ஜனவரி மாதம் இறுதியில் படக்குழுவினர் இந்தியா திரும்பவுள்ளனர். தொடர்ந்து ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் படத்தினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தியாகராஜன் படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்..
பாலிவுட் சூப்பர் ஸ்டாரை அஜித்திற்கு வில்லனாக்கிய சிவா…???

பாலிவுட் சூப்பர் ஸ்டாரை அஜித்திற்கு வில்லனாக்கிய சிவா…???

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் துவங்கியது. அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மிகவும் மும்முரமாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு, இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் யார் என்று இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உலக அளவில் எதிர்பார்க்கப்படும் படம் என்பதால், பாலிவுட் நடிகர் ஒருவரை அஜித்திற்கு வில்லனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் சிவா. இதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சனை அஜித்திற்கு வில்லனாக நடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அஜித்திற்கு வில்லனாக அபிஷேக் பச்சன் நடிப்பார்...
இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

News
தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இவர் ஏற்கனவே இந்த படத்திற்கான தீம் மியூசிக்கை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார் அஜித்திடம். அதன்பின் இரவு பகலாக இந்த படத்திற்கான பாடல்களை இசையமைத்து வந்தார் அனிருத். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கான இசையையும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல்களை கேட்ட அஜித்தும் மகிழ்ச்சியில் உள்ளாராம். வேதாளம் படத்தில் இடம் பெறும் மிரட்டலான பாடல்களை தான் இந்த படத்திலும் கொடுத்துள்ளாராம்.
அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அஜித்தின் ‘டபுள் ட்ரீட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

அஜித்தின் ‘டபுள் ட்ரீட்’: ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

News
அஜித் தற்போது ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பிய நாட்டில் வெற்றிகரமாக நடத்தி முடித்து வந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சிவா இயக்குகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இன்னும் சில நாட்களில் ஐதராபாத் செல்லவிருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு கொலை பற்றி விசாரிக்க அஜித் நாடு நாடாக செல்கிறார். இது தான் படத்தின் கதை. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் ஒருவரை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால், சில பல காரணத்தால் அது நிறுத்தப்பட்டது. தற்போது அஜித்தே இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க சிவா முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வில்லன் ரோல் எந்த மாதிரியான கெட்-அப்பில் இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. இந்த செய்தி இன்னும் இயக்க
“ஏகே 57”: அடுத்த லுக்கில் மிரட்ட தயாராக இருக்கும் அஜித்..!!

“ஏகே 57”: அடுத்த லுக்கில் மிரட்ட தயாராக இருக்கும் அஜித்..!!

News
அஜித் தற்போது ‘ஏகே 57’ படத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்லவிருக்கின்றனர் படக்குழுவினர். ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமான காட்சிகளை படமெடுத்து திரும்பியுள்ளனர் படக்குழுவினர். தற்போது இந்த படத்திற்கான வில்லனை தேர்வு செய்துள்ளார். அவர் பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திரமாம். அவரை இந்த படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வர இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் மொத்த படக்குழுவும் ஐதராபாத் செல்லவிருக்கும் நிலையில் அங்கு எடுக்கப்படவிருக்கும் காட்சிகளில் அஜித் ஒரு மிரட்டலான லுக்கினை கொடுக்கவிருக்கிறாராம். இதற்காகதான் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லுக் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பினை அடையும் என்கிறது படக்குழு. வேதாளம் படத்தில் அஜித்தின் ‘வேத
அஜித்தை ’ஹாலிவுட்’ நடிகர் என்று நினைத்த பிரபலம்..!!

அஜித்தை ’ஹாலிவுட்’ நடிகர் என்று நினைத்த பிரபலம்..!!

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏ கே 57’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்றது. வெறும் 38 நாட்களில் படப்பிடிப்பினை முடித்து இந்தியா திரும்பியுள்ளனர் படக்குழுவினர். அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும், அக்‌ஷராஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கருணாகரனும் இப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது அஜித் விமானத்தில் ஏறியதும் அனைவரும் அவரை ஆச்சரியமாக பார்த்துள்ளனர். வட இந்தியாவை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர் இவர் யார் என்று இயக்குனர் சிவாவிடம் கேட்டுள்ளார். சிவா, ‘இவர் தென்னிந்தியாவில் ஒரு பிரபலமான நடிகர்.’ என்று கூறியுள்ளார். தொழிலதிபரோ, ’இவரை பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கி