Tag: actress thamannah

கோடை வெயிலில் கருகிய வெள்ளைத்தோல் தமன்னா!!

கோடை வெயிலில் கருகிய வெள்ளைத்தோல் தமன்னா!!

News
ரெட்ஜெயண்ட் தயாரிப்பில் உதய நிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கண்ணே கலைமானே'. சீனு ராமசாமி இயக்குகிறார். தமன்னா, வசுந்தரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். எப்போதும்போல இம்முறையும் வெகு அழுத்தமான கதையொன்றை கையில் எடுத்துள்ளாராம் சீனு ராமசாமி. இக்கதை உதய நிதியின் மரியாதையை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அதோடு நடிப்பில் பெயர் வாங்கித் தரும் படமாகவும் இருக்கும் என்கிறார்கள். மதுரையின் கோடை வெயிலில் முப்பது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை முடித்திருக்கின்றனர்.  வெயிலை சமாளிக்க முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டாராம் தமன்னா. இப்போது பாடல் காட்சிக்காக கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது கண்ணே கலைமானே டீம். வெள்ளத்தோல் தம்மன்னா இனியாவது குளுகுளுன்னு இருக்கட்டும்!
தமன்னாவா… இல்லை அனுஷ்காவா கடும் போட்டி???

தமன்னாவா… இல்லை அனுஷ்காவா கடும் போட்டி???

News
தமன்னாவா... இல்லை அனுஷ்காவா கடும் போட்டி??? எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகும் படம் 'மகாபலி'. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அனுஷ்கா ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் , ராணா, ரம்யாகிருஷ்ணன். சுதீப் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால் தமன்னாவுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே 'இடை' காட்டுவதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . சரித்திரக்கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு , ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.