Tag: Anushka

பாகுபலி 2 – விமர்சனம்

பாகுபலி 2 – விமர்சனம்

Reviews
இந்திய சினிமா மட்டுமல்ல உலக சினிமாவும் வியந்து வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்த படம் தான் பாகுபலி 2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், தேவசேனா எப்படி கைது செய்யப்பட்டார் என பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தில் எடுக்கப்பட்ட ஒரு வேகம் இரண்டாம் பாகத்தில் எடுபட்டதா என பார்க்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக காலகேயனையும் அவனது கூட்டத்தையும் வதம் செய்த பிறகு பாகுபலி அரசனாக மூடி சூட்டுவதற்கு முன் தாய் சிவகாமியின் உத்தரவுக்கிணங்க நாட்டினை வலம் வருகிறார் பாகுபலி. அப்போது சிற்றரசு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியாக வரும் அனுஷ்காவை (தேவசேனா) சந்தித்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறார். அனுஷ்காவும் பாகுபலி மீது காதல் கொள்கிறார். இந்த விஷயம் பாகுபலியின் அண்ணனாக வரும் பல்வாள்தேவனின் செவிகளுக்கு
’எஸ் 3’ அப்டேட்: சூர்யாவோடு இணையும் ராதிகா சரத்குமார்….

’எஸ் 3’ அப்டேட்: சூர்யாவோடு இணையும் ராதிகா சரத்குமார்….

News
சிங்கம் 2வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஹரியோடு மீண்டும் கைகோர்த்திருக்கிறார் சூர்யா. சிங்கம் படத்தின் மூன்றாம் பகுதியாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு ‘எஸ் 3’. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். மேலும், ராதிகா சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் மலேசியாவில் துவங்க இருக்கிறது. முக்கியமான சண்டைக்காட்சி அங்கு படமாக்கப்பட இருக்கிறது. மொத்தம் 9 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
”தல 57” படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்.. இதோ..!!

”தல 57” படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்.. இதோ..!!

News
தல 57 படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று வெளியானது. அந்த அறிவிப்புகள் இதோ... சத்ய ஜோதி films நிறுவனத்தாரின் பிரமாண்டமான படைப்பு . அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்குகிறார். பாரம்பரியமாக தரமான படங்களை தயாரிக்கும் பழம் பெரும் நிறுவனமான சத்ய ஜோதி films தற்போது தயாரிப்பில் இருக்கும் தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் ' தொடரி ' , விக்ரம் பிரபு நடிப்பில் , பிரபாகரன் இயக்கத்தில் உருவாகும் ''முடிசூடா மன்னன்' ஆகிய படங்களை தொடர்ந்து தயாரிக்கும் பிரமாண்டமான படைப்பில் அஜித் குமார் நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் சிவா ஆவார். வீரம் , வேதாளம் ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் குமாரை சிவா இயக்குவது இது மூன்றாவது முறை. அனிருத் இசை அமைக்க, வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், ஆண்டனி ரூபன் படத்தொகுப்பில், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப் படும் இந்தப்படத்த
”தல 57” துவங்குவது எப்போது..??? வெளிவந்த ரகசிய தகவல்..!!

”தல 57” துவங்குவது எப்போது..??? வெளிவந்த ரகசிய தகவல்..!!

News
வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தோடு இணைந்திருக்கும் படம் தான் “தல 57”. இந்த படத்திற்காக இசையமைக்கவிருக்கிறார் அனிருத். ஒளிப்பதிவு செய்கிறார் வெற்றி. இவர்கள் இருவரும் ஏற்கனவே வேதாளம் படத்தில் இணைந்திருந்ததால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் ஒரு டானாக தோன்றவிருக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாம். அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். அஜித், இந்த படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றியிருக்கிறார். படத்தினை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி கண்டிப்பாக தொடங்கியே ஆக வேண்டும் என்பதில் படக்குழுவினர் மிகவும் உறுதியாக இருக்கிறார்களாம். ஏனென்றால், ஜூலை மாதம் 16 ஆம் தேதி ஆடி மாதம் துவங்க இருப்பதால் தான் இந்த முடிவாம். கிட்டத்தட்ட 1 வருட காலம் படத்திற்கு இடைவெளிவிட
தல 57: ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்..!!

தல 57: ஆட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்..!!

News
மூன்றாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைந்து “தல 57” படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது, அனுஷ்கா அஜித்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்த படத்தினை பற்றிய மேலும் சில தகவல்கள் இன்னும் சில நாட்களில் தெரிய வரும். அஜித்தின் ரசிகர்கள் இப்போதே தங்களது ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார்கள். மதுரையில் உள்ள அவர்து ரசிகர்கள் “தல 57” படத்திற்காக காத்திருக்கிறோம் என்று பெரிய அளவிலான விளம்பரங்களை அச்சடித்திருக்கிறார்கள். இப்போதிலிருந்தே தங்களது பணிகளை தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள்..
அஜித்திற்காக பட வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளும் அனுஷ்கா..!!

அஜித்திற்காக பட வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளும் அனுஷ்கா..!!

News
அஜித்துடன் நடிப்பதற்கு அனைத்து நடிகைகளும் ஆசைப்படுவார்கள். பல நடிகைகள் இவரது ரசிகர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் ”தல 57” படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளின் சிபாரிசு வந்தும் கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர் அனுஷ்கா தான். இவர் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் அனுஷ்காவிற்கு பல பட வாய்ப்புகள் வருகிறதாம். அனைத்து பட வாய்ப்புகளை உதறி தள்ளி வருகிறாராம், எல்லாமே அஜித்துடன் நடிப்பதற்கு தானாம். தல 57 படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதால், விரைவில் இவர் வெளிநாடு செல்லவிருக்கிறார்.
அஜித்தின் “தல 57” படத்தின் புதிய செய்திகள்… ரசிகர்கள் உற்சாகம்..!!

அஜித்தின் “தல 57” படத்தின் புதிய செய்திகள்… ரசிகர்கள் உற்சாகம்..!!

News
அஜித்-சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. தல 57 என தற்போதைய டைட்டிலுடன் படத்தை ஆரம்பிக்கவுள்ளனர். வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி படப்பிடிப்பினை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், படத்தினை சத்ய ஜோதி லிலிம்ஸ் சார்பாக டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார். படத்தினை முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கவிருக்கிறார்களாம். அஜித் மற்றும் அனுஷ்கா சம்மந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த காட்சிகள் அனைத்தும் ஜார்ஜியாவில் நடைபெறும் எனவும் தெரிகிறது..