Tag: Anushka

”தல” அஜித்திற்காக அனுஷ்கா எடுக்கும் ரிஸ்க்..!!

”தல” அஜித்திற்காக அனுஷ்கா எடுக்கும் ரிஸ்க்..!!

News
வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக நம்முடைய தளத்தில் செய்தியாக தெரிவித்திருந்தோம். இந்த கூட்டணியில் அனுஷ்காவும் இணைந்திருக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே என்னை அறிந்தால் படத்திலும் அஜித்தோடு நடித்திருந்தார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடம்பை கணிசமாக ஏற்றிருந்த அனுஷ்கா, தற்போது உடலை குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஏனென்றால், அஜித்துடன் காதல் காட்சிகள் பலவும், பாடல் காட்சிகளும் இருப்பதால் தன் உடலை குறைத்து வருகிறார் அனுஷ்கா. உடலை ஏற்றுவது இறக்குவதுமாக அனுஷ்கா தன்னுடைய உடலில் பெரிய ரிஸ்க் எடுக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிக்கிறார் ஷக்தி??

சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிக்கிறார் ஷக்தி??

News
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பி.வாசுவின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளியானது “சந்திரமுகி”. வசூலில் பட்டையை கிளப்பியது இந்த சந்திரமுகி. இப்போது கன்னட உலகில் தனது படைப்பினை செம்மையாக செய்து வருகிறார் பி வாசு. அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் “சிவலிங்கா” என்ற கன்னட படத்தை தமிழில் பி.வாசு இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதை “சந்திரமுகி-2”ம் பாகமாக எடுக்க பி வாசு முடிவு செய்துள்ளாராம். ராகவா லாரன்ஸ் மற்றும் அனுஷ்காவை வைத்து இந்த படத்தினை எடுக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பி வாசுவின் மகனான ஷக்தி வாசுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கின்றன..
கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?? தெரிவதற்கு இன்னும் 400 நாட்கள் ஆகும்!!

கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?? தெரிவதற்கு இன்னும் 400 நாட்கள் ஆகும்!!

News
கடந்த ஆண்டு வெளியான படங்களில் நல்ல ஒரு சாதனையையும், நல்ல ஒரு வசூலையும் ஈட்டித் தந்த ஒரே படம் “பாகுபலி”. இயக்குனர் ராஜமெளலியின் இயக்கத்தில் உருவானது இந்த பிரம்மாண்டமான படைப்பு. பல நாட்கள் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிய இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகம் திரைக்கு வர இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றனர். முதல் பாகத்தில் எழுந்த “கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்??” என்ற கேள்விக்கு பதில் கிடைப்பதற்கு இன்னும் சரியாக 400 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது அடுத்த வருடம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று தான் பாகுபலியின் இரண்டாம் பாகம் வெளியே வருமாம். அது வரை இந்த கேள்விக்கு விடை கிடைக்காமல் சுற்றலாம்...
சர்ச்சையின் முழு சொரூபமான ”குற்றப் பரம்பரை”யை கையில் எடுத்து இருக்கும் பாலா!

சர்ச்சையின் முழு சொரூபமான ”குற்றப் பரம்பரை”யை கையில் எடுத்து இருக்கும் பாலா!

News
பாலாவின் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் “தாரை தப்பட்டை” வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் நாயகியாக வரலட்சுமி நடித்துள்ளார். அடுத்த படமாக பாலாவின் இயக்கத்தில் உருவாக இருக்கிறது “குற்றப் பரம்பரை”. பெரும் சர்ச்சையான கதைகளம் என்பதால் பல இயக்குனர்கள் விலகி இருக்க தைரியமாக கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் பாலா. விஷால், ஆர்யா, ராணா டக்குபதி, அதர்வா, அரவிந்த சாமி, மனிஷா கொய்ராலா, அனுஷ்கா, என ஒரு நடிகர்களின் பட்டாளத்தையே நடிக்க வைக்கிறார் பாலா. படத்தின் பொருட்செலவு அதிகம் ஏற்படும் என்பதால் படத்திற்கு தயாரிப்பாளரை தேடும் முயற்சியில் இருக்கிறார் இயக்குனர். அனைவரின் கால்ஷீட்டும் ஒரே நேரத்தில் பெற்று படத்தினை முடிக்க திட்டமிட்டிருக்கிறார் பாலா.
வரும் 27ம் தேதி வெளிவர தயாராக இருக்கும் ஆர்யா அனுஷ்காவின் “இஞ்சி இடுப்பழகி”

வரும் 27ம் தேதி வெளிவர தயாராக இருக்கும் ஆர்யா அனுஷ்காவின் “இஞ்சி இடுப்பழகி”

News
பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும், தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமா இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுஷ்காவை போலவே 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படமும் தன்னுடைய எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா , ஊர்வசி , பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் இப்போது கௌரவ வேடத்தில் நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்மா, ரானா ஆகியோருடன் ஹன்சிகா,தமன்னா,ஸ்ரீ திவ்யா, ரேவதி ஆகியோர் நடித்து உள்ளனர்.ஜீவாவும் , ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி சிம்மாவும், ஸ்ரீ திவ்யாவும் ஆர்யாவுடன் பெங்களூரு days remake படத்
விராட் & அனுஷ்காவிற்கு ஜனவரியில் திருமணம் – அழைப்பிதழ் ரெடி!

விராட் & அனுஷ்காவிற்கு ஜனவரியில் திருமணம் – அழைப்பிதழ் ரெடி!

News
இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வருகின்றனர். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக தான் செல்கின்றனர். வீராட் கோலி ஆடும் கிரிக்கெட் போட்டிற்கும் அனுஷ்கா சர்மா தவறாமல் கலந்து கொள்வார். இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர். திருமணம் அடுத்த வருடம் அதாவது 2016 ஜனவரி 26ம் தேதி நடத்த முடிவு எடுத்துள்ளனர் இவர்களது பெற்றோர்கள். இதற்காக அழைப்பிதழ்களும் தயார் செய்து விட்டனர். திருமணம் மும்பையில் நடைபெறுகிறது.
பாகுபலி-2 வந்ததும் கல்யாணம் தான் – பிரபாஸ்

பாகுபலி-2 வந்ததும் கல்யாணம் தான் – பிரபாஸ்

News
பாகுபலி படத்தின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் இழுத்து கொண்டவர் பிரபாஸ். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம். சில தினங்களுக்கு முன் தனது 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். பல முன்னனி நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அனுஷ்காவுடன் காதல் என வலம் வந்த வதந்திகளுக்கெல்லம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். பிரபாஸின் பெற்றோர்கள் அவரிடம் திருமணத்திற்கு வற்புறுத்த அவரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம். மேலும் பிரபாஸின் பெற்றோர்கள் ஒரு பட்டதாரி பெண்ணை பார்த்து விட்டதாகவும் பாகுபலி-2ம் பாகம் வெளி வந்ததும் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.