Tag: Arun Vijay

குற்றம் 23 – விமர்சனம்

குற்றம் 23 – விமர்சனம்

Reviews
Rating 3/5 என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என தனது கதாபாத்திரத்தை முத்திரை பதித்து தமிழ் சினிமாவிலும் ஒரு வலுவான முத்திரையை பதித்தவர் அருண்விஜய். இவரது நடிப்பிலும் ஈரம், வல்லினம் படத்தினை இயக்கிய அறிவழகன் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் தான் ‘குற்றம் 23’. மிகவும் எதிர்பார்ப்போடு வெளிவந்த இப்படம் எந்த வகையான விமர்சனத்தை சந்தித்துள்ளது என்று பார்த்து விடலாம். ஒரு சர்ச்சில் பாவ மன்னிப்பு கோர பெண் ஒருவள் அங்கு வருகிறாள். அந்த பெண் அங்குள்ள பாதரிடம் தான் தவறு செய்து விட்டதாகவும், அந்த தவறு என்னவென்று அந்த பாதரிடம் கூற, அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள் சர்ச்சிற்குள் நுழைய பாதரை கொன்று விட்டு, அந்த பெண்ணையும் கடத்திச் சென்று விடுகிறார்கள். யார் அவர்கள் என்பதை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக (AC) வருகிறார் அருண் விஜய். மாயமான அந்த பெண் சில நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைக்கிறார். தனது
”அருண்விஜய்யை தேர்வு செய்தது அஜித் தான்” – கெளதம் வாசுதேவ் மேனன்…

”அருண்விஜய்யை தேர்வு செய்தது அஜித் தான்” – கெளதம் வாசுதேவ் மேனன்…

News
ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன், அருண் விஜய்யை வைத்து இயக்கியுள்ள படம் தான் ‘குற்றம் 23’. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘ அருண் விஜய் மிகச் சிறந்த ஒரு நடிகர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிச்சலாகவும், தைரியமாகவும் செய்யக் கூடியவர். எனது என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய் தான் வில்லனுக்கு பொருத்தமாக இருப்பார் என முதல் ஆளாக கூறியவர் அஜித் தான். அதே போல் அவரை வைத்து எந்த ரிகர்சலும் எடுக்க தேவையில்லை, நேரடியாக காட்சிகள் எடுத்து விடலாம். மிகவும் அற்புதமான நடிகர்” என கூறினார்... தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இசைத்தட்டினை வெளியிட நடிகர் ஜெயம் ரவி அதை பெற்றுக் கொண்டார்.
அஜித் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது நன்றி – நிகழ்ச்சியில் அருண்விஜய் உருக்கமான பேச்சு..!!

அஜித் சாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது நன்றி – நிகழ்ச்சியில் அருண்விஜய் உருக்கமான பேச்சு..!!

News
கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்தது “என்னை அறிந்தால்”. படத்தினை இயக்கியிருந்தார் கெளதம் மேனன்.படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதில் வில்லனாக நடித்தவர் அருண் விஜய். விக்டர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார். இந்த கதாபாத்திரம் இவரை வேறு ஒரு உலகத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. மேலும், சில தினங்களுக்கு முன் சிங்கப்பூரில் நடைபெற்ற SIIMA 2016 விருது வழங்கும் விழாவில், இவருக்கு 2015 ஆண்டு சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருதினை பெற்றுக் கொண்டு பேசிய அருண் விஜய், “ மிகவும் சந்தோஷமாக உள்ளது. உன்னால் முடியும் இன்னும் நல்லா பண்ணு என்று எனக்கு ஊக்கமளித்த அஜித் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் க
அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் இருக்கிறது அருண் விஜயின் ‘குற்றம் 23’..!!

அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் இருக்கிறது அருண் விஜயின் ‘குற்றம் 23’..!!

News
இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'குற்றம் 23' திரைப்படம், ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அறிவழகனின் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாக தான் இருக்கும். அதுவும் இது ஒரு அதிரடி படம் என்பதால், சண்டை காட்சிகளுக்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது என்பதை உறுதியாக சொல்கிறது சமீபத்தில் வெளியான படத்தின் 'மோஷன் போஸ்டர்'. தற்போது 'குற்றம் 23' , அருண் விஜயின் அசத்தலான அதிரடியிலும், அனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிலும் கலைக்கட்டி வருகிறது. 'சாட்டை' படப்புகழ் மகிமா நம்பியார் அருண் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தை இந்திர குமார் அவர்களின் 'ரேடான் தி சினிமா பீபள்' நிறுவனத்தோடு இணைந்து 'இன் சினிமாஸ் என்டர்டைன்மன்ட்' நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி அருண் தயாரித்து வர
நடிகர் அருண் விஜயின் 36 மணி நேர தொடர் த்ரில்லர் காட்சி..!!

நடிகர் அருண் விஜயின் 36 மணி நேர தொடர் த்ரில்லர் காட்சி..!!

News
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று, எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த அருண் விஜய். 'என்னை அறிந்தால்' திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் தேர்வு செய்யாமல், தனக்கான கதையம்சம் கொண்ட திரைப்படத்தை தேடி கொண்டிருந்தார். அந்த தேடல் தற்போது ஈரம் புகழ் அறிவழகன் மூலமாக நிறைவேறி உள்ளது. பொதுவாகவே சண்டை காட்சிகளில் வித்தியாசத்தை எதிர் பார்க்கும் அருண் விஜய், இந்த மூலம் ரசிகர்கள் இடையே தனக்கு உள்ள action ஹீரோ இமேஜினை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த திரைப்படத்தின் முக்கிய அங்கமான ஒருக் காட்சி படமாக்கப்பட்டது. சென்னை புற நகர் பகுதி ஒன்றின் மிகப்,பெரிய குப்பை கிடங்கில் காலை 6 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 36 மணி நேரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இடையில் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெறும் இந்த படப்