Tag: director siva

பல்கேரியா ஸ்டண்ட் வீரர்களை வாயடைக்க வைத்த ’அஜித்’ – வீடியோ உள்ளே…

பல்கேரியா ஸ்டண்ட் வீரர்களை வாயடைக்க வைத்த ’அஜித்’ – வீடியோ உள்ளே…

News
அஜித் சிறு வயதில் இருந்தே ஒரே ரேஸ் வீரர் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இவர் தற்போது ஏகே 57 படத்திற்காக பல்கேரியா சென்றுள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்குதான் படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். இதற்காக பல்கேரியா ஸ்டண்ட் வீரர்களை பயன்படுத்தியுள்ளார் சிவா. அப்போது அஜித் ரேஸ் பைக்கில் சென்று சண்டையிடும் காட்சியை படமாக்கியுள்ளனர். வழக்கம் போல் ரேஸ் பைக்கினை எடுத்து அஜித் தனது ஸ்டண்ட் வேலைகளை கண்ணா பின்னாமாக காட்டியுள்ளார். இதனை பார்த்த பல்கேரிய ஸ்டண்ட் வீரர்கள வாயடைத்து போய் நின்றுள்ளனர்..
அஜித் சாரோடு நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – அக்‌ஷராஹாசன்…

அஜித் சாரோடு நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – அக்‌ஷராஹாசன்…

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏகே 57’ல் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா சென்றுள்ளனர். இந்த படப்பிடிப்பில் நடிகை அக்‌ஷராஹாசனும் கலந்து கொள்ளவிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, ’அஜித் சார் ஒரு சிறப்பான நடிகர், மேலும், அவருடன் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷடம்.’ என்று கூறியுள்ளார். மேலும், இயக்குநர் சிவா வேதாளம் படத்திற்கு அடுத்த ஒரு சாதனை படத்தை இயக்குவார்’ என்றும் அக்‌ஷராஹாசன் கூறியுள்ளார்.
‘ஏகே 57’ல் ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள்.. மிரட்டும் அஜித்..!!

‘ஏகே 57’ல் ஹாலிவுட் தரத்தில் சண்டைக்காட்சிகள்.. மிரட்டும் அஜித்..!!

News
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஏகே 57’. படம் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 50 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்போடு 90 சதவீதம் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிடுமாம். அதன்பிறகு, சென்னையில் சில காட்சிகளை படமாக்கிவிட்டு படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறார்கள். இப்படம் ஐரோப்பாவில் தொடங்கும்போது, அங்கு நடக்கும் சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கவனித்து வந்தார். அதன்பிறகு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற சண்டைக் காட்சிகளை வீரம் கணேஷ் கவனித்தார். தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வரும் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கவிருக்கிறார்களாம். இதனால் பல ஹாலிவுட் படங்களில் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களை பயன்படுத்தவிருக்கிறார்களாம். பாலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட்ட
பாலிவுட் சூப்பர் ஸ்டாரை அஜித்திற்கு வில்லனாக்கிய சிவா…???

பாலிவுட் சூப்பர் ஸ்டாரை அஜித்திற்கு வில்லனாக்கிய சிவா…???

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் ஐதராபாத்தில் துவங்கியது. அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மிகவும் மும்முரமாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு, இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் வில்லன் யார் என்று இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உலக அளவில் எதிர்பார்க்கப்படும் படம் என்பதால், பாலிவுட் நடிகர் ஒருவரை அஜித்திற்கு வில்லனாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் சிவா. இதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சனை அஜித்திற்கு வில்லனாக நடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதாம். அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அஜித்திற்கு வில்லனாக அபிஷேக் பச்சன் நடிப்பார்...
இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

News
தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இவர் ஏற்கனவே இந்த படத்திற்கான தீம் மியூசிக்கை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார் அஜித்திடம். அதன்பின் இரவு பகலாக இந்த படத்திற்கான பாடல்களை இசையமைத்து வந்தார் அனிருத். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கான இசையையும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல்களை கேட்ட அஜித்தும் மகிழ்ச்சியில் உள்ளாராம். வேதாளம் படத்தில் இடம் பெறும் மிரட்டலான பாடல்களை தான் இந்த படத்திலும் கொடுத்துள்ளாராம்.
அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
”தல 57” ஹிட் அடிக்க அஜித் – சிவாவின் வியூகம்…!!

”தல 57” ஹிட் அடிக்க அஜித் – சிவாவின் வியூகம்…!!

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீரம், வேதாளம் என தொடர்ந்து இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்த இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே இப்படம் பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு படமாக திகழ்கிறது. மேலும், இதற்கு இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகியிருக்கும் வீரம், வேதாளம் இரண்டுமே ‘வி’ என்ற ஆங்கில சொல்லில் ஆரம்பிப்பதால் இந்த படத்திற்காகவும் ‘வி’ என ஆரம்பிக்கும் தலைப்பையே வைக்க அஜித் சிவாவிடம் கூறியிருக்கிறாராம். இதற்காக ’வி’ என ஆரம்பிக்கும் டைட்டிலை பக்கம் பக்கமாக எழுதி வருகிறாராம் இயக்குனர் சிவா. அந்த தலைப்புகளில் இருந்து அஜித் தேர்வு செய்யும் டைட்டிலை படத்திற்கு வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வரும் டிசம்பர் மாதம் படத்தின் டைட்டிலையும், பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட
ஏகே 57: அஜித்திடம் வாங்கிக் கட்டிக்கொண்ட காஜல்..!!

ஏகே 57: அஜித்திடம் வாங்கிக் கட்டிக்கொண்ட காஜல்..!!

News
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆஸ்த்ரியா நாட்டில் துவங்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் அஜித் விதித்த முதல் கட்டளை இதுதான். படத்தின் எந்த ஸ்டில்லும், லுக்கும் வெளியே செல்லக் கூடாது என்பது தான். ஆனால் அதையும் மீறி சில நாட்களுக்கு முன், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. மேலும், காஜலும் அவரது புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனால் காஜல் மீது மிகுந்த கோபத்தில் உள்ளாராம் அஜித். இயக்குனர் சிவாவும் காஜலிடம் கடிந்து கொண்டதால் அந்த புகைப்படத்தை அழித்துவிட்டார் காஜல்.
”தல” அஜித்திற்காக அனுஷ்கா எடுக்கும் ரிஸ்க்..!!

”தல” அஜித்திற்காக அனுஷ்கா எடுக்கும் ரிஸ்க்..!!

News
வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித்-சிவா கூட்டணி மீண்டும் இணையவிருப்பதாக நம்முடைய தளத்தில் செய்தியாக தெரிவித்திருந்தோம். இந்த கூட்டணியில் அனுஷ்காவும் இணைந்திருக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே என்னை அறிந்தால் படத்திலும் அஜித்தோடு நடித்திருந்தார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடம்பை கணிசமாக ஏற்றிருந்த அனுஷ்கா, தற்போது உடலை குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். ஏனென்றால், அஜித்துடன் காதல் காட்சிகள் பலவும், பாடல் காட்சிகளும் இருப்பதால் தன் உடலை குறைத்து வருகிறார் அனுஷ்கா. உடலை ஏற்றுவது இறக்குவதுமாக அனுஷ்கா தன்னுடைய உடலில் பெரிய ரிஸ்க் எடுக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
உருவாகிறது பிரம்மாண்ட கூட்டணி….. காத்திருக்கும் தல ரசிகர்கள்..!!

உருவாகிறது பிரம்மாண்ட கூட்டணி….. காத்திருக்கும் தல ரசிகர்கள்..!!

News
வேதாளம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு அஜித், சிவா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து அஜித் அவர்கள் விஷ்ணுவர்தன் அல்லது முருகதாஸோடு கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முருகதாஸோடு இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் Header Image பக்கத்தில் அஜித்தின் புகைப்படத்தை வைத்துள்ளார். இதனால் அஜித்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் வெளியான வெற்றி படமான ”தீனா”வில் இணைந்த அஜித்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைவதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் தல ரசிகர்கள்...