Tag: jilla

அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
விஜய்யை மயக்கிய பிரபல ஆடை வடிவமைப்பாளர்..!!

விஜய்யை மயக்கிய பிரபல ஆடை வடிவமைப்பாளர்..!!

News
விஜய் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த படம் “ஜில்லா”. இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமானவர் ஜாய் கிரிஸில்டா. தனது முதல் படத்திலேயே நல்ல ஒரு வரவேற்பை பெற்றவர். அந்த படத்தில் அவரது டிசைன் அனைத்தும் பிடித்து போக தனக்கென்று ஒரு சட்டை வடிவமைத்து தர முடியுமா என விஜய் நேரில் சென்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்காக ஸ்பெஷல் சட்டை ஒன்றை வடிவமைத்து விஜய்யிடம் கொடுத்துள்ளார் ஜாய். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாய். இதனை தொடர்ந்து மிருதன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படங்களுக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
கேரளாவையும் ஆட்டிப்படைக்கும் இளையதளபதி..!!

கேரளாவையும் ஆட்டிப்படைக்கும் இளையதளபதி..!!

News
தமிழ்நாட்டில் இளையதளபதிக்கு இணையான ரசிகர்களை கொண்டுள்ள ஒரே மாநிலம் கேரளா மட்டும்தான். விஜய் படம் வெளிவருகிறது என்றாலே கேரளாவில் திருவிழா கோலம் தான்.. அந்த அளவிற்கு ரசிகர்களை வைத்துள்ளார் விஜய். இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான் தெறி தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. டாப் ஐந்து இடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் வசூலில் அங்கு ஆக்கிரமித்துள்ளன. தெறி இரண்டாம் இடத்திலும், ஜில்லா ஐந்தாம் இடத்திலும் வசூலில் முன்னிலையில் உள்ளது.. விஜய்யின் தெறி ஆட்டம் கேரளாவையும் விட்டுவைக்கவில்லை..
ஜில்லா படத்திற்கு “யு” சான்றிதழ்

ஜில்லா படத்திற்கு “யு” சான்றிதழ்

News
ஜில்லா படத்திற்கு “யு” சான்றிதழ் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது.