Tag: Jothika

எனக்கே வந்த ஒரு சவால் தான் அது – சிவக்குமார்

எனக்கே வந்த ஒரு சவால் தான் அது – சிவக்குமார்

News
ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பதும் எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது 2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில்'கம்பராமாயணம்' - உரைநிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாதுஎன்பதைப்போலவே - ராமாயணத்தைவிட கதைஅமைப்பில் 4 மடங்குபெரியதான - உலக இலக்கியங்களில் பெரியதுஎன்று சொல்லப்படும் -மகாபாரததின் மொத்தக்கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக - ​​ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு - திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசிமுடித்திருப்பதும் எனக்கேவிடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது
2.15 மணி நேரத்தில் மகாபாரத கதையை முடித்த சிவகுமார்!

2.15 மணி நேரத்தில் மகாபாரத கதையை முடித்த சிவகுமார்!

News
நடிகர் சிவக்குமார் நேற்று ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாபாரத கதையை சுமார் 2.15 மணி நேரத்தில் கூறி சாதனை படைத்துள்ளார். இதற்காக அவர் 2 வருடங்களாக மகாபாராத கதையை முழுவதுமாக படித்து தயாராகியுள்ளார். கதையை கூறி முடித்தது கல்லூரி பெண்கள் அனைவரும் எழுந்து கர ஓசைகளை எழுப்பி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தனது மகன்களும் நடிகர்களுமாகிய சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். மேலும் ஜோதிகாவும் கலந்து கொண்டார். சிவக்குமார் தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு tamilcinemaz.com சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.