Tag: kajal agarwal

தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

News
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட மற்ற கடைசி படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவருக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜல் அகர்வாலுடன் அஜித்திற்கு நிறைய ரொமண்டிக் காட்சிகளை வைத்திருந்தாராம் சிவா. ஆனால், தன் ரசிகர்கள் ரொமன்ஸ் காட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்காக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெறட்டும். அதை தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.’ என்று அஜித் சிவாவிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம்.
’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

’தல 57’ல் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்த காஜல்..!!

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘தல 57’. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிப்பதை பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார் காஜல் அகர்வால். அவர் கூறியதாவது, ‘ இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் அஜித் சார் உடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிவா சார் இயக்கத்தில் அவருட பணி புரிவது மேலும் மகிழ்ச்சி தான். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது தான். இப்போதைக்கு இதுவரை தான் என்னால் கூற முடியும்.” என்று கூறினார்.
கவலை வேண்டாம் – திரைவிமர்சனம்

கவலை வேண்டாம் – திரைவிமர்சனம்

Reviews
ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கவலை வேண்டாம்’. யாமிருக்க பயமேன் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ‘டீ கே’ இப்படத்தை இயற்றியுள்ளார். ஜீவா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணம் புரிய இப்படத்தினை வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான இப்படம் இருவருக்கும் எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை காணலாம். ஜீவா-காஜல் இருவருக்கும் திருமணமாகி இரண்டு நாட்கள் கூட இணைந்து இல்லாமல் பிரிந்து விடுகிறார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு காஜல், பாபி சிம்ஹாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். இதற்காக விவாகரத்து பெறுவதற்காக மீண்டும் ஜீவாவை சந்திக்கிறார் காஜல். என்னுடன் ஒரு வார காலம் மனைவியாக வாழ்ந்தால் மட்டுமே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுவதாக கூறிவிடுகிறார் ஜீவா. அந்த ஒரு வார காலத்
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’

“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’

News
வாழ்க்கை என்பது மிக சிறியது.... அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு.... என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, 'யாமிருக்க பயமே' புகழ் டீகே இயக்கி இருக்கும் 'கவலை வேண்டாம்' திரைப்படம். ஜீவா - காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'யாமிருக்க பயமே' படம் மூலம் பெருமளவு பாராட்டுகளை பெற்ற இயக்குநர் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. "மனதை மயக்கும் பாடல்கள், கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்ற மைய கருத்து மற்றும் கண்களை கவரக்கூடிய எழில் மிகு காட்சிகள்.
இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

இசையில் மிரட்டிய அனிருத்… மகிழ்ச்சியில் அஜித்..!!

News
தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இவர் ஏற்கனவே இந்த படத்திற்கான தீம் மியூசிக்கை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார் அஜித்திடம். அதன்பின் இரவு பகலாக இந்த படத்திற்கான பாடல்களை இசையமைத்து வந்தார் அனிருத். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பாடல்களுக்கான இசையையும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடல்களை கேட்ட அஜித்தும் மகிழ்ச்சியில் உள்ளாராம். வேதாளம் படத்தில் இடம் பெறும் மிரட்டலான பாடல்களை தான் இந்த படத்திலும் கொடுத்துள்ளாராம்.
அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.