Tag: MigaMigaAvasaram

காக்கிப் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர்! ’மிக மிக அவசரம்’ படம் பேசும் செய்தி அதுதானா?

காக்கிப் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் டார்ச்சர்! ’மிக மிக அவசரம்’ படம் பேசும் செய்தி அதுதானா?

Movies, News
காக்கி உடை கம்பீரமானதுதான். ஆனால் அதை யார் அணிகிறார்கள் என்பதை பொறுத்தது அது! உயர் போலீஸ் அதிகாரிகள் என்றால் தப்பித்தார்கள். அடிமட்ட காவலர்கள் என்றால், அறுந்தது நூல்! உயர் அதிகாரிகளின் ஓவர் அழிச்சாட்டியத்தில் செத்தே போக வேண்டியதுதான். ஒரு லேடி கான்ஸ்டபுளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் போலீஸ் அதிகாரியின் ஆடியோ பதிவு, இன்றளவும் பிரசித்தம். இதை மையமாக வைத்துதான் ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. பாரதிராஜா உள்ளிட்ட தமிழ்சினிமாவின் பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். அறம், அருவி வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய படம் ‘மிக மிக அவசரம்’ என்ற வாழ்த்துக் குரல்கள் மெல்ல கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்க வீதிகளில். இந்தப்படம் சொல்லும் கருத்தோடு, மேலும் ஒரு நிஜம் நடமாட ஆரம்பித்திருக்கிறது இன்று. பெண் ஆய
பிச்சைக்காரனாகவே மாறிய பிரபல பத்திரிக்கையாளர்!

பிச்சைக்காரனாகவே மாறிய பிரபல பத்திரிக்கையாளர்!

News
  கங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் முதன் முறையாக இயக்கும் படம் மிக மிக அவசரம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பெண் காவலர்களின் பிரச்னைகள் குறித்து பேசும் படமாக உருவாகி இருக்கிறது மிக மிக அவசரம். இந்தப் படத்தில் பத்திரிகையாளர் காவேரி மாணிக்கத்தையும் நடிக்க வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. மேலை நாட்டு சினிமா இயக்குநர் ஒருவர் தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபர்களை பிச்சையெடுக்க செல்ல சொல்லுவாராம். யார் அதிகமாக பிச்சையெடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பாராம். தன்னை கீழே இறக்கி கொள்பவனே சிறந்த நடிகனாக முடியும் என்பதை உணர்த்தும் சம்பவம் இது. காவேரி மாணிக்கம் மிக மிக அவசரம் படத்தில் ஒரு பிச்சைக்காரன் வேடத்தில்தான் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் நடத்த சுவாரஸ்யமான அந்த சம்பவத்தை பகிர்ந்துகொள்கிறார் சுரேஷ் காமா