Tag: Pandiraj

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன “INA”… உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்..!!

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன “INA”… உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்..!!

News
சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்தது “இது நம்ம ஆளு”. படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ரசிகர்களிடையும் , மக்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது இந்த படம். இந்நிலையில் படத்தின் 50 வது நாளான இன்று சிம்பு ரசிகர்கள் மிக உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். இதற்காக ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர் சிம்பு ரசிகர்கள். டாப் ட்ரெண்டில் #50DaysOfBlockbusterINA என்ற இந்த ட்விட்டை டாப்பில் கொண்டு வந்துள்ளனர், அதுவும் இந்திய அளவில். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு உள்ளனர்..
”நான் இப்போ இல்ல… எப்பவுமே தல ரசிகன் தான்…” – சிம்பு ஓபன்.!!

”நான் இப்போ இல்ல… எப்பவுமே தல ரசிகன் தான்…” – சிம்பு ஓபன்.!!

News
சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது “இது நம்ம ஆளு”. சிம்பு மீண்டும் பழைய பார்முக்கு வந்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அப்படியான ஒரு அழகான நடிப்பை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார். படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் களிப்பில் இருக்கும் சிம்பு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது,” நான் இப்போ இல்ல எப்பவுமே தல ரசிகன் தான். நான் அவருடைய ரசிகன் என்பதை என் ஒவ்வொரு படத்திலும் நான் காட்டுவேன். மேலும், என்னுடைய முக்கியமான காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்கள் அஜித்தும் அவர்களுடைய ரசிகர்கள் மட்டும் தான்.” என்று கூறினார். சிம்பு பட வரிசையில் “இது நம்ம ஆளு” மட்டுமே அதிக வசூலை வாரிக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...
வசூலில் மிரட்டி தள்ளும் சிம்புவின் ”இது நம்ம ஆளு”..!!

வசூலில் மிரட்டி தள்ளும் சிம்புவின் ”இது நம்ம ஆளு”..!!

News
ஒரு வழியாக திரைக்கு வந்துவிட்டது சிம்புவின் “இது நம்ம ஆளு”. படத்திற்கு நல்ல ஒரு ரிசல்ட் கிடைத்திருப்பது சிம்புவை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியாவின் அழகான நடிப்பால் மேலும் படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. சிம்பு மீண்டும் திரையில் வந்து வெற்றி பெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுவரை வந்த நிலவரங்களின் படி தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 17.5 கோடி அளவிற்கு வசூல் செய்துள்ளதாம் இந்த படம். மேலும் உலகம் முழுவதும் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.. மேலும் சிம்புவின் பட வரிசையில் இந்த படம் மட்டுமே அதிகமான வசூலை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது...
வசூலை வாரிக்குவித்த சிம்புவின் “இது நம்ம ஆளு”..!!

வசூலை வாரிக்குவித்த சிம்புவின் “இது நம்ம ஆளு”..!!

News
சிம்பு, நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த வெள்ளி அன்று உலகம் முழுவதும் வெளியானது ”இது நம்ம ஆளு”. ரசிகர்களிடையே படத்திற்கு நல்ல ஒரு வரவேற்பும் கிடைத்தது. பாண்டிராஜ் படத்தினை இயக்கியிருந்தார். ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் படத்தினை வெளியிட்டது. பாக்ஸ் ஆபிசில் முதல் நாள் நிலவரப்படி சுமார் 5.5 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாம் இந்த படம். மேலும் சனி, ஞாயிறு தினங்களில் மேலும் வசூலை வாரிக் குவித்துள்ளதாம். சிம்பு படங்களில் அதிகப்படியான முதல் நாள் வசூல் இது தானாம்..
இது நம்ம ஆளு – விமர்சனம்

இது நம்ம ஆளு – விமர்சனம்

Reviews
ஒர் பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் சாப்ட்வேர் இஞ்சினியராக வருகிறார் சிவா(சிம்பு). அவருக்கு உதவியாளராக வருகிறார் சூரி. அரட்டை, கலாட்டா என வாழ்க்கை செல்ல தன் அப்பாவின் ஆசைக்காக நயன்தாராவை பெண் பார்க்க செல்கிறார் சிம்பு. நயன்தராவை பார்த்தவுடன் அவர் மீது காதல் வருகிறது சிம்புவிற்கு. நயன்தாரா சிம்புவிடம் தனியாக பேச அழைக்கிறார். ஆண்ட்ரியாவின் காதல் பற்றி சிம்புவிடம் கேட்கிறார் நயன்தாரா.... இந்த இடம் செட் ஆகாது என சிம்பு கிளம்ப, பிடித்திருக்கிறது என்கிறார் நயன்தாரா. ஆண்ட்ரியாவின் காதல் ப்ளாஷ் பேக் பக்கம் போகிறது கதை .... ஆண்ட்ரியாவும் சிம்புவும் காதலிக்கிறார்கள். பாடல்கள், கெஞ்சல், கொஞ்சல் என அமைதியாக செல்லும் காதல் திருமணத்தை எட்டும் போது சில காரணங்களால் இருவரும் பிரிந்து விடுகின்றனர். இந்த பிளாஷ் பேக் முடிந்ததும் மீண்டும் நயன்தாராவின் பக்கம் கதை திரும்ப, நயன்தாராவும் சிம்புவ