
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் ‘ஆண் தேவதை’..!
அறிமுக கதாநாயகியாக தான் நடித்த 'ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன்.
தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..
"ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குநர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப் படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..
சொல்லப்போனால் ஜோக்கர் படத்திற்கு அடுத்ததாக இந்தப்படம் வந்தால் எனது கேரியர் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன்.
காரணம் ஜோக்கர் படத்தில் நீங்கள் பார்த்த மல்லிகாவுக்கும் இதில் பார்க்கப்போகும் ஜெஸிகாவு