Tag: Thala

அஜித்தின் விவேகம்: வரலாறு படைத்த வெளிநாட்டின் வசூல்!

அஜித்தின் விவேகம்: வரலாறு படைத்த வெளிநாட்டின் வசூல்!

News
அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாந்து ‘விவேகம்’. படம் கலவையான விமர்சனங்கள் பல சந்தித்தாலும் வசூலில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் திரயுல பயணத்தில் இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளிநாடுகளில் குவித்த வசூல் நிலவரங்கள் இதோ, மலேசியா- 1.47 மில்லியன் டாலர் UAE, GCC- 1.2 மில்லியன் டாலர் US, Can- 730k டாலர் Eur- 420k டாலர் UK- 230k டாலர் Aus,NZ,SA,OTR- 250k டாலர் sing, SL- 1.25 மில்லியன் டாலர் மொத்தமாக சுமார் 35 கோடிகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விடுதலைக்காக காத்திருக்கும் ’தல’ ரசிகர்கள்!

விடுதலைக்காக காத்திருக்கும் ’தல’ ரசிகர்கள்!

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் படு வேகமாக வளர்ந்து வருகிறது ‘விவேகம்’. படத்தின் முழு படப்பிடிப்பும் சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த செய்தியை இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்தார். இப்படத்தின் சர்வைவா பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி தல ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இப்பாடலை அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புது சாதனையும் படைத்தது. இந்நிலையில் வரும் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது. ’தலை விடுதலை’ என துவங்கும் இப்பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலையும் தெறிக்க விட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Vivegam Movie Stills

Vivegam Movie Stills

Movies
" template="/home/content/63/10041863/html/tamilcinemaz/wp-content/plugins/nextgen-gallery/products/photocrati_nextgen/modules/ngglegacy/view/gallery-caption.php" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
”என்னைத் தோற்கடிக்கணும்னு …..” அஜித்தின் விவேகம் ‘பஞ்ச்’!

”என்னைத் தோற்கடிக்கணும்னு …..” அஜித்தின் விவேகம் ‘பஞ்ச்’!

News
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் அஜித் சில பஞ்ச் டயலாக்கை வாரி வீசிருக்கிறாராம். அதில் ஒரு பஞ்ச் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ‘என்னைத் தோற்கடிக்கணும்னு எல்லாரும் நினைக்கிறாங்க. நான் தோற்கணுமா, இல்லையானு நான்தான்டா முடிவு செய்யணும்’ என்ற டயலாக்கைத்தான் ‘விவேகம்’ படத்தில் பேசியிருக்கிறாராம் அஜீத். இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேகத்தின் இறுதி கட்டத்தில் ‘விவேகம்’…

வேகத்தின் இறுதி கட்டத்தில் ‘விவேகம்’…

News
அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘விவேகம்’. சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் பல்கேரியா பகுதியில் நடக்கவிருக்கிறது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா செல்லவிருக்கின்றனர். வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி அல்லது ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்ட் மாதத்தில் படத்தினை வெளியிட அஜித் படக்குழுவினர் உத்தரவிட்டுள்ளாராம். இதற்காக படத்தின் பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகிறதாம்...
விவேகத்திற்கு அஜித் கொடுத்த ஒத்துழைப்பு கொஞ்சமில்லை – இயக்குனர் சிவா…

விவேகத்திற்கு அஜித் கொடுத்த ஒத்துழைப்பு கொஞ்சமில்லை – இயக்குனர் சிவா…

News
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விவேகம். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ள படக்குழு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைப்பை இணையத்தில் வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சிவா, "'விவேகம்' அனைத்து தரப்பு மக்களையும் கவரக்கூடிய வகையில் உருவாக்கப்படும் ஆக்‌ஷன் படமாக்கும். பெரும் பொருட்செலவில் உருவாவதால், படத்தின் திரைக்கதை மிகவும் நேரம் எடுத்து உருவாக்கியுள்ளேன். இப்படத்தில் அஜித்தின் இன்னொரு லுக்கையும் விரைவில் வெளியிடவுள்ளோம். டீஸர் மற்றும் டிரெய்லருக்கு முன்பு வெளியாகும். பல்கேரியாவில் இ
விவேகம்: வில்லனுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்…

விவேகம்: வில்லனுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்…

News
சில தினங்களுக்கு முன் வெளியானது அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர். இந்த போஸ்டர் தல ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த போஸ்டரை திரை நட்சத்திரங்கள் பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கியமான சண்டைக் காட்சிகள் விரைவில் படமாக்கப்படவிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள MGR Film சிட்டியில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் தான் படத்தின் வில்லனாக வரும் விவேக் ஓபராயுடனான சண்டைக் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம். படத்தில் மிகவும் முக்கியமான சண்டைக்காட்சி இது என்பதால் பலத்த பாதுகாப்புடன் இந்த காட்சி எடுக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
’அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி..’ – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்…

’அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் நன்றி..’ – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்…

News
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த வியாழன் அன்று வெளியாகியிருக்கும் படம் தான் ‘ராயீஸ்’. இப்படம் வெற்றி பெற அஜித் ரசிகர்கள் பலர் ட்விட்டர் பக்கத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அஜித் அவர்களுக்கும் எனது அன்பை தெரிவித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
மீண்டும் துவங்கியது அஜித்தின் ‘ஏகே 57’ படப்பிடிப்பு..!!

மீண்டும் துவங்கியது அஜித்தின் ‘ஏகே 57’ படப்பிடிப்பு..!!

News
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது ‘ஏகே 57’. படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மாகாணத்தில் நடைபெற்று வந்தது. படத்தின் அநேக முக்கியமான காட்சிகள் அனைத்தும் அங்கு படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் அதிகாரியாக வருகிறார். அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. முதலில் இதன் படப்பிடிப்பை ஜனவரி மாத இறுதியில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் தற்போது இப்படம் பிப்ரவரியில்தான் முடியும் என சொல்லப்படுகிறது. மேலும் மே இறுதியில் அல்லது ஜூனில் படம் வெளியாகுமாம்
தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

தன் ரசிகர்களுக்காக அஜித் என்ன செய்தார் தெரியுமா..??

News
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஏ கே 57’. படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட மற்ற கடைசி படப்பிடிப்பு சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் அஜித் ஒரு இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவருக்கு மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காஜல் அகர்வாலுடன் அஜித்திற்கு நிறைய ரொமண்டிக் காட்சிகளை வைத்திருந்தாராம் சிவா. ஆனால், தன் ரசிகர்கள் ரொமன்ஸ் காட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்காக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெறட்டும். அதை தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.’ என்று அஜித் சிவாவிடம் கண்டிஷன் போட்டுள்ளாராம்.