Tag: thuppaakki

அஜித் ஒரு ஜெண்டில்மேன்  – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

அஜித் ஒரு ஜெண்டில்மேன் – மனம் திறக்கும் காஜல் அகர்வால்..!!

News
விஜய்யுடன் ஜில்லா, துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்த காஜல் அகர்வால், தற்போது அஜித்துடன் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் காஜல் அகர்வாலிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பிற்கு வெளியே நடந்து கொள்வதிலும் அஜித்தை போல் ஒரு ஜெண்டில்மேனை பார்த்ததில்லை. பழகுவதற்கு அவரை போல் யாரும் இல்லை. ,மிகவும் நேர்த்தியான மனிதர்’ என்று கூறியுள்ளார். காஜல் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்திலும் நடித்து வருகிறார். விஜய்-அட்லீ இணையும் படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மணிரத்னம் படங்களில் மட்டும் பணியாற்றுகிறேனா? -சந்தோஷ் சிவன்

மணிரத்னம் படங்களில் மட்டும் பணியாற்றுகிறேனா? -சந்தோஷ் சிவன்

Interviews
இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். புதிய சிந்தனை, வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் போனவர். தமிழில் ‘ரோஜா’, ‘தளபதி’, ‘இருவர்’, ‘உயிரே’, ‘ராவணன்’ படங்களுக்கு ஆகிய கேமராமேனாக பணியாற்றியுள்ளார். ‘அனந்தபத்ரம்’, ‘சாம்ராட் அசோகா’, ‘மல்லி, ‘நவரசா’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். 15-ம் நூற்றாண்டு கதையான ‘உருமி’ என்ற படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்படுகிறார் சந்தோஷ் சிவன். விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ படத்திற்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் இவரிடம் பேசியபோது... * உங்களைப் பற்றி? என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதை நான் தன்னடக்கமாகவும் பேசவில்லை, கர்வமாகவும் நினைக்கவில்லை. திருவனந்தபுரத்தில் பிறந்தேன். சினிமா மீது கொண்ட ஆசையில் கேமராமேனாகினேன். ஏறக்குறைய எல்லா மொழி சினிமாவிலும் பணியாற்றி விட்டேன். * இயக்குனர் மணிரத்னம் படங்களில் மட்டும் பணியாற்றுவீர்களாமே?