Tag: vanjagar Ulagam trailer

‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை! அனிஷா அம்ரோஸ்

‘வஞ்சகர் உலகம்’ வழக்கமான கேங்க்ஸ்டர் படம் இல்லை! அனிஷா அம்ரோஸ்

News
  கன்னட திரைப்படம் 'கர்வ்வா' மற்றும் பல மொழித் திரைப்படமான 'மனமந்தா' (மோகன்லால் மற்றும் கௌதமி நடித்தது) போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அனிஷா அம்ப்ரோஸ். தனது நடிப்பால் மிகவும் பாராட்டப்பட்ட அனிஷா அம்ப்ரோஸ், தமிழ் சினிமாவில் வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் காலடி எடுத்து வைக்கிறார். ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் வஞ்சகர் உலகம் சிறப்பாக வந்திருப்பதில் முழு திருப்தி. அனிஷாவுக்கு டபுள் ஹேப்பி! படம் பற்றி அனிஷா கூறியதாவது, "செய்தி சேகரிக்கும்போது ஒரு கொடூரமான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் சம்யுக்தா என்ற பத்திரிகையாளரின் பாத்திரத்தில் நடிக்கிறேன். அதிலிருந்து அவள் மீண்டு வந்தாளா என்பது? என்பது தான் என் கதாபாத்திரம் என்கிறார் அனிஷா. வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகள், அதன் கதாபாத்திரங்களை கொண