தல பற்றி தெரியாதவங்க இங்க வாங்க.. படிங்க…. தல டா….!!

Thala-Ajith-Latest-Mass-HD-images-stills-Wallpapers-DP-1

மாஸ் ஓபனிங் காட்சிகள் என்றால் அதில் தல என்றைக்குமே தலயாக தான் நிற்பார். தல அஜித்தின் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை நாம் திரும்பி பார்த்துவிட்டு வரலாம்…

தான் பிறந்தது ஹைதராபாத் என்றாலும், வாழ்ந்தது தமிழகமும், அவரது ரசிகர்களின் நெஞ்சங்களிலும் தான்… கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரே கலைஞன்..

1971 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி பிறந்த இவரின் தந்தை பெயர் சுப்பிரமணியம், தாய் பெயர் மோகினி. வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தான். கல்லூரி படிப்பிற்கு பிறகு தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கார்மெண்ட் நிறுவனத்தில் பணி புரிந்தார். பிறகு சொந்தமாகவே ஒரு கார்மெண்ட் கம்பெனியை தொடங்கினார்.

Ajith-Kumar-Thala-9

அந்த கம்பெனியில் நஷ்டம் ஏற்பட, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விளம்பர படங்களில் இருந்து படிப்படியாக சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.

1990 ஆம் ஆண்டு வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாணவனாக அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு 1993 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த “அமராவதி” படத்தின் மூலம் தன்னை ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்திக் கொண்டார். அமராவதி படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தது நம்ம சீயான் விக்ரம் தான்.

b-whtgqumaaxb7x

அதன் பிறகு 1994 ஆம் ஆண்டு பாசமலர்கள் என்ற படத்தில் நடித்தார், அதே ஆண்டில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான ”பவித்ரா” படத்தின் வெற்றியின் மூலம் அனைவரின் பார்வையையும் தன் மேல் விழ வைத்தார் அஜித்.

தீராத கார் ரேஸ் வீரரான இவர் படங்களில் நடித்து வரும் போது அவ்வப்போது ரேஸ் போட்டிகளிலும் கலந்து கொள்வார். ஒரு விபத்தின் மூலம் பல மாதங்கள் தொடர்ச்சியான ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் வந்து நடித்த படம் தான் “ஆசை”.

காதல் கோட்டை மூலம் இந்தியா வரை உள்ள ரசிகர்கள் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்கும் படி வைத்தார். தொடர்ந்து உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, தொடரும், வாலி, நீ வருவாய் என பல படங்கள் ஹிட் மேல் ஹிட் அடித்தது. அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஷாலினியை மணமுடித்தார். 2000 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது.

Ajith-Shalini-JFW-Magazine

இவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், இரண்டாவதாக ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

அதன் பிறகு தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, பூவெல்லாம் உன் வாசம், சிட்டிசன், வில்லன், அட்டகாசம், வரலாறு, கிரீடம், பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என பல ஹிட் படங்களை கொடுத்தார்.

தமிழ் சினிமாவின் “கிராண்ட் ஓபனிங் மாஸ்டர்” என்ற பட்டத்தையும் பெற்றார்.

Thala-Ajith-Latest-Mass-HD-images-stills-Wallpapers-DP-7

சினிமாவை தவிர நல்ல ஒரு எண்ணங்களும், அடுத்தவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற மனப்பான்மையும் அதிகமாக கொண்டவர். படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டால், அவரது போன் சைலண்ட் மோடில் தான் கிடக்கும், தனது அடுத்த படத்தின் கதையையோ, அல்லது அதன் தயாரிப்பாளரோ படப்பிடிப்பு தளத்திற்குள் வர அனுமதிக்க மாட்டார்.

கேரவனில் அதிகமாக இருக்க மாட்டார், டைரக்டர் எப்போது கூப்பிட்டாலும் உடனே செல்வதற்கு எப்போதும் தயாராக தான் இருப்பார். மாலை ஆறு மணிக்கு மேல் யாருக்கும் போன் செய்து தொந்தரவு செய்ய மாட்டார்.

யாருக்காவது அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து வீட்டிற்கு வரவழைத்தால் அவர்கள் வருவதற்கு முன்னரே தல ரெடியாக இருப்பார். அவர்களை வரவேற்று தண்ணீர் கொடுப்பதில் இருந்து விருந்து பரிமாறும் வரை அனைத்து வேலைகளையும் அவரே செய்வார்.

Ajith-Kumar-Thala-3

அதிகமாக வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அனைவருக்கும் பிரியாணி விருந்து தான் இருக்கும்.. ஏனென்றால் அந்த பிரியாணியை செய்பவரே அஜித் தான். சமையலலில் அஜித் கைதேர்ந்தவர் தான். தீராத சாய் பாபாவின் பக்தர்.. அடிக்கடி சீரடி கோயிலுக்கு தரிசனம் சென்று வருவார்.

தான் ஓட்டும் வாகனங்கள் அனைத்தையும் பிரித்து அது எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வார். வீட்டினை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்.

பண்டிகை காலங்களில் வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விருந்து வைத்து, பரிசும் கொடுத்து அனுப்பி வைப்பார். எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களின் மனம் புண் படும்படி பேசி விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்.

வேறு யாராவது புண் படும்படியான வார்த்தைகள் பேசி விட்டால் சிறு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்து விடுவார். இது தான் தல குணம்….

28sli4

படங்கள் தேர்ந்தெடுப்பதிலோ, அல்லது வேறு எதாவது முடிவுகள் எடுப்பதிலோ மனைவி, நண்பர்கள் என யாரிடமும் கேட்டு எடுக்க மாட்டார். சுய முடிவு எடுத்து அதில் வெற்றியும் காண்பார்.

Thala-Ajith-Latest-Mass-HD-images-stills-Wallpapers-DP-1

விருதுகளுக்கு ஆசைப்படாத ஒரே நடிகர்…
விருதுகள் அனைத்தும் ஏங்கும் இவரின் கரம் பட….

தல அஜித்தை சுற்றி இருப்பவர்கள் அவர்களது ரசிகர்கள் அல்ல.. அவரது வெறியர்கள்…

இவரை பின்பற்றி நடப்பவர்கள் இவரின் படங்களை பார்த்து நகர்பவர்கள் அல்ல.. இவரை பார்த்து வெல்பவர்கள்…

தலன்னா சும்மா இல்ல…. தல டா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *