”தல 57” துவங்குவது எப்போது..??? வெளிவந்த ரகசிய தகவல்..!!

Thala-57-9
வேதாளம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தோடு இணைந்திருக்கும் படம் தான் “தல 57”. இந்த படத்திற்காக இசையமைக்கவிருக்கிறார் அனிருத். ஒளிப்பதிவு செய்கிறார் வெற்றி. இவர்கள் இருவரும் ஏற்கனவே வேதாளம் படத்தில் இணைந்திருந்ததால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கிறது.

மேலும், அஜித் இந்த படத்தில் ஒரு டானாக தோன்றவிருக்கிறாராம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாம். அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.

அஜித், இந்த படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றியிருக்கிறார். படத்தினை வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி கண்டிப்பாக தொடங்கியே ஆக வேண்டும் என்பதில் படக்குழுவினர் மிகவும் உறுதியாக இருக்கிறார்களாம். ஏனென்றால், ஜூலை மாதம் 16 ஆம் தேதி ஆடி மாதம் துவங்க இருப்பதால் தான் இந்த முடிவாம்.

கிட்டத்தட்ட 1 வருட காலம் படத்திற்கு இடைவெளிவிட்ட அஜித் மீண்டும் படத்தினை துவங்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *