உரு – விமர்சனம்

 
Rating – 3/5
 
அறிமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த ‘உரு’. 
 
கதைப்படி, பிரபல எழுத்தாளராக வரும் கலையரசன், தற்போது இருக்கும் ட்ரெண்ட்க்கு ஏற்றவாறு கதை எழுதுவதற்காக அடர்ந்த மேகமலைக்கு செல்கிறார்.
 
அங்கிருக்கும் ஒரு வீட்டில் இருந்து கொண்டு கதை எழுத ஆரம்பிக்கிறார். தனியாக இருக்கும் அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெறுகிறது. 
 
அதுவும் அவர் எழுதும் கதையில் என்ன இருக்கிறதோ அதுவே நடக்கிறது. ஒரு முகமூடி அணிந்த நபர் கலையரசனை கொல்ல முயற்சிக்கிறார். யார் அவர்..?? எதற்காக கலையரசனை கொல்ல முயற்சிக்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை. 
 
கலையரசன் தன்னுடைய படங்களில் கதைகளை தேர்வு செய்வதிலேயே வல்லவராக இருக்கிறார். அதே கண்கள், எய்தவனை தொடர்ந்து தற்போது இவர் நடித்திருக்கும் இந்த ‘உரு’வரை கதைகளை நன்றாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஒரு எழுத்தாளனுக்குரிய உடல்மொழியில் ஜொலிக்கிறார் கலையரசன். நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கலையரசன்.
 
படத்தின் மிகப்பெரிய பலமே தன்ஷிகா தான். இவரை தவிர வேறு ஒருவரும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருக்க முடியாது. இதற்கே இயக்குனருக்கு ஒரு பெரிய பாராட்டினை தெரிவித்துக் கொள்ளலாம். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்று புரிந்து படம் முழுவதும் சிறப்பாக நடித்துள்ளார்.
 
ஒரு சில ஹாலிவுட் படங்களை நினைவுப் படுத்தினாலும், தரமான திரில்லர் மேக்கிங்கை தான் கொடுத்துள்ளார் இயக்குனர். பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் தான். ஜோகனின் பின்னனி இசை மிரட்டுகிறது. 
 
க்ளைமாக்ஸ் காட்சிகள் கொஞ்சம் தெளிவான புரிதலை கொடுத்திருந்தால் கதை இன்னும் சற்று மிரட்டியிருக்கும்.
 
உரு – மிரட்டலின் உச்சம்.

Leave a Reply

Your email address will not be published.