வனமகன் – விமர்சனம்

Rating 3.5/5

தொடர்ந்து நல்ல வெற்றி படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜெயம் ரவி, போகன் படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய்யோடு இணைந்து உருவாக்கப்பட்ட படம் தான் இந்த ‘வனமகன்’. ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் ரசிகர்களை சரியாக சென்றடைந்ததா இல்லையா என்பதை பார்த்து விடலாம்.

அந்தமான் பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு மழைவாழ் பழங்குடி இனத்தில் ஒருவராக வருகிறார் ஜெயம் ரவி. படத்தின் ஆரம்பத்திலே இந்த கூட்டத்தினர் சிலரை கொன்று ஜெயம் ரவியோடு பலரை கைது செய்கின்றனர் போலீசார்.

அதில் இருந்து ஜெயம் ரவி தப்பித்து விடுகிறார். அப்போது சென்னையில் அந்தமானிற்கு இருந்து சுற்றுலா வந்த நாயகி சாயிஷாவின் காரில் அடிபட்டு விடுகிறார் ஜெயம் ரவி. அவரை அங்கிருந்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு வருகிறார் சாயிஷா.

சாயிஷா, தனது அப்பா இறந்ததும் அவரது நண்பர் பிரகாஷ் ராஜின் பாதுகாப்பில் வளரும் மிகப்பெரிய கோடீஸ்வர வீட்டுப் பெண். காட்டுவாசியாக வளர்ந்த ஜெயம் ரவி சிட்டியில் பார்க்கும் அனைத்தையும் வியப்பாக பார்த்து மிரள அவரை தன் கண்ட்ரோலில் கொண்டு வருகிறர் சாயிஷா.

மீண்டும் அந்தமான் போலீஸ் சென்னை வந்து ஜெயம் ரவியை கைது செய்து அந்தமான் அழைத்து செல்கிறது. அழைத்துச் சென்று ஜெயம் ரவியை கொல்ல நினைக்கிறார்கள் போலீசார்…. ஏன் ஜெயம் ரவியை கொல்ல நினைக்கிறார்கள்.?? அந்த காட்டுக்குள் அப்படி என்னதான் நடந்தது..?? ஹீரோ, ஹீரோயின் நிலை என்ன..?? என்பதே படத்தின் கதை.

ஜெயம் ரவி காட்டுவாசியாகவே நடித்திருக்கிறார்.. இல்லை வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் தனக்கென ஒரு டயலாக் கூட இல்லை என தெரிந்தும் படத்தின் கதை மீது முழு நம்பிக்கை வைத்து இப்படத்தில் நடித்ததற்காக ஜெயம் ரவிக்கு பெரிய பாராட்டு தெரிவித்துக் கொள்ளலாம். காட்டுவாசிக்கே உரித்தான ஒரு உடல்வாகு, கண்களின் மொழி என அனைத்திலும் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் அடுத்த பலம் என்றால் ஹீரோயின் சாயிஷாதான். ஆரம்பத்தில் ஹீரோவைக் கண்டால் அலறி அடித்து ஓடுவதும், ஹீரோ மீது காதல் வயப்பட்டதும் அவரை அரவணைப்பதும்… சிறப்பான நடிப்பு. பிரபுதேவாவின் நடனத்தை மிக கச்சிதமாக உள்வாங்கி நடனத்திலும் தனது ஸ்கோரை உயர்த்திருக்கிறார். படம் முழுவதும் அழகாகவே இருக்கிறார்.

காடுகள் பின்னணியில் பற்றி கடம்பன் போன்று பல படங்கள் வந்தாலும் வனமகன் அதிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது. தம்பி ராமையா அவ்வப்போது காமெடி என்ற பெயரில் சமூகத்திற்கு தேவையான சில நல்ல கருத்துக்களை பதிவிட்டுச் செல்கிறார்.

நாட்டுக்குள்ள கூகுள் மேப், காட்டுக்குள்ள ஈகிள் மேப்….. பிரகாஷ்ராஜ் ஒவ்வொரு காட்சியிலும், தான் ஒரு சீனியர் நடிகர் என்பதை தெளிவாக காட்டுகிறார். க்ளைமேக்ஸில் சில ட்விஸ்ட்டுகளும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

ஹாரீஸ் ஜெயராஜ்ஜின் இசையில் ’சிலு சிலு ….’ பாடல் நெகிழ வைக்கிறது. பின்னனி இசையும் படத்தோடு சேர்ந்து பயணிக்கிறது. திருவின் ஒளிப்பதிவு பசுமை காட்டுகிறது. கதையின் மேல் இயக்குனர் வைத்த நம்பிக்கை அவரை கைவிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *