முதல்வருடன் விஜய் சந்திப்பு: முதலில் நீங்க நிறுத்துங்க அப்புறம் நாங்க நிறுத்துறோம்…கறார் முதல்வர்…

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் சுமார் 140 கோடி செலவில் உருவாகியுள்ளது ‘மெர்சல்’. படத்தினை வரும் தீபாவளி அன்று வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பு கூறிவந்தாலும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து தடை இல்லா சான்று இன்னும் படத்திற்கு வழங்கப்படவில்லையாம்.

பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது மெர்சல் திரைப்படம்.

இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா? என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பிலோ அல்லது தமிழக அரசு தரப்பிலோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.