”அந்த கதை வேண்டாம்.. ஆனால் உங்க தயாரிப்பில் நான் நடிக்கிறேன்” – விஜய்…

vijay
விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ’பைரவா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் விஜய் என்று கேள்விகள் பல எழுந்து கொண்டிருக்கின்றன. ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக சுந்தர் சி மிகவும் பிரம்மாண்டமாக இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்திற்கு 250 நாட்கள் வரை கால்ஷீட் தேவைப்பட்டதால் அந்த கதையை நிராகரித்து விட்டார் விஜய்.

ஆனால், தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நிச்சயம் நடிப்பேன் என வாக்குறுதி அளித்தார். இதன்படி இயக்குனர் அட்லி விஜய்க்காக மீண்டும் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையை விஜய் ஓகே சொன்னதாக தெரிகிறது. ஆகவே அந்த படத்தை தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வைக்க வேண்டும் என விஜய் முடிவு செய்துள்ளாராம்.

மீண்டும் இந்த தெறி கூட்டணி இணைந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் பட உலகில் வரலாறு காணாத வசூல் மழையை குவித்த படம் தெறி, மீண்டும் இந்த கூட்டணி இணைந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *