”இளைய தளபதியை” ரசிகர்கள் கொண்டாட காரணம் என்ன..??

Actor-Vijay-forcelebrities.com-hd-wallpapers
ஜூன் மாதம் 22 ஆம் தேதி 1974வது வருடம் பிறந்த விஜய்யின் இயற்பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை பெயர் எஸ் ஏ சந்திரசேகர். தாயார் பெயர் சோபா சந்திரசேகர்.

இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிகப் பெரிய இயக்குனர். இவரது இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த ”நாளைய தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் நாயகனாக தன் மகன் விஜய்யை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், 1993 ஆம் ஆண்டு வெளிவந்த “செந்தூரப் பாண்டி” என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்த விஜய், பட்டி தொட்டி எங்கும் அவரது முகம் தெரிய வந்தது.

hqdefault

இதுவரை விஜய் நடிப்பில் கிட்டத்தட்ட 59 படங்கள் வெளிவந்துள்ளன. கடைசியாக வந்த ”தெறி” வெறும் ஆறு நாட்களில் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. தற்போது பரதன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். தன்னை ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், டான்ஸர் என பல முகங்களை தன்னுள் வைத்திருப்பவர்.

1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் விஜய். திருமணம் செய்து கொண்ட நாள் முதல் சங்கீதா விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக மாறிவிட்டார். அவ்வப்போது அவர் நடித்த படங்களிலும் அவர் காஸ்ட்யூம் டிசைனராக இருந்திருக்கிறார். பல புதுமுக நாயகிகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் விஜய் அவர்களே சாரும். ஜோதிகா, த்ரிஷா, சிம்ரன் நடிகைகள் உட்பட..

vijay_oldpics

பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவில் அவர்களை வாழ வைத்தவரும் விஜய் தான். கோடிக்கணக்கான ரசிகர்களை தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொண்டுள்ள ஒரே நடிகன் விஜய் தான். மேலும், ரசிகர்கள் இவருக்கு “இளைய தளபதி” என்ற பட்டத்தை அளித்து பெருமை படுத்தியுள்ளனர். தளபதியின் கையசவிற்கு தன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு பல ரசிகர்களை கொண்டிருக்கிறார் விஜய்.

அவ்வப்போது, தன் நண்பர்களுடன் சேர்ந்து தான் படித்த லயோலா கல்லூரிக்கு சென்று அங்குள்ள பெஞ்சுகளில் அமர்ந்து தன் நண்பர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு வருவார். தனது பிறந்த தினமான ஜூன் மாதம் 22 ஆம் தேதி எங்கு இருந்தாலும், அது வெளிநாடாக இருந்தாலும் பறந்து வந்து தனது தாயின் பக்கத்தில் வந்து விடுவார், அன்றைய தினம் முழுவதும் தனது தாயின் அருகிலேயே இருந்து பிறந்தநாளை கொண்டாடுவார்.

எவ்வளவு வேலை இருந்தாலும் தூங்குவதற்கு முன்னால் ஒரு ஆங்கிலப்படமாவது பார்த்துவிட்டு தான் தூங்கவே செல்வார். இவருக்கு பிடித்தது ஆங்கில படங்களின் சி டி கலெக்‌ஷன் தான். இவரது கலெக்‌ஷனை இவரது வீட்டிற்கு சென்றால் பார்க்கலாம். ஆயிரக்கணக்கான சிடி கள் இருக்கும்.

400x400_IMAGE53761372

நான்வெஜ் சாப்பாடு மிகவும் பிடிக்கும். அதுவும் தன் அம்மா செய்யும் அசைவ உணவிற்கு அடிமை. தோசை, மட்டன் குருமா இவருக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று. தமிழில் மிகவும் பிடித்தமான நடிகர் சூப்பர் ஸ்டார் தான். ரஜினியின் ரசிகரும் கூட. சமீபத்திய ஒரு பேட்டியில் இதை அவரே கூறியிருக்கிறார். ,மேலும், ஹிந்தியில் அமிதாப். இவரது படங்களை ஒன்று விடாமல் அனைத்தையும் பார்த்து விடுவார்.

நண்பர்கள் அனைவரையும் மச்சி என்று தான் அழைப்பார். மூத்தவர்களாக இளையவர்களாக இருந்தாலும் அண்ணா என்று தான் அழைப்பார். எவரையும் மரியாதையாக தான் அழைப்பார். வருடத்திற்கு ஒரு முறையாவது லண்டன் ட்ரிப் உண்டு. வேறு எங்கேயாவது வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அதை முடிவு செய்வது அவரது மகன் சஞ்சய் தான்.

மிக நெருங்கிய நண்பன் என்றால் தன் மகன் சஞ்சய் தான். சஞ்சய்யுடன் பொழுது போக்குவதை மிகவும் அதிகமாக விரும்புவார். கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் இருவரும் டென்னிஸ் விளையாடுவார்கள். விஜய்க்கு நிகராக சஞ்சய்யும் விளையாடுவார்.

சஞ்சய்யின் ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோவில் பதிவு செய்வார். விஜய்க்கு மிகவும் பிடித்த நடனக்காரர்கள் பிரபு தேவாவும், லாரன்சும் தான்.

நெருங்கிய நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்கு அவரது கையினாலேயே சாப்பாடு பரிமாறுவார். கிச்சன் பக்கம் போய் தனக்கு தெரிந்த தோசையினையும் வார்த்துக் கொடுப்பார். வீட்டிற்கு வரும் நண்பர்களிடம் அதிக நேரம் பேசி உரையாடுவார். இரவு நேரங்களில் தனது மகன் மகளுடன் காரில் எப்போதாவது ரைடு சென்று வருவார்.

Vijay-Childhood-Unseen-Photos-600x261

மற்ற மொழிப்படங்களில் நடிப்பதை இன்னமும் தவிர்த்து வருபவர். தமிழ் படங்களை தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்க மறுத்தவர். எப்பவும் சமீபத்திய இவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் வரும் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார். படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டே இருப்பார்.

படங்களை மட்டுமே பார்த்து வளர்ந்து, சேர்ந்த கூட்டம் இவரது ரசிகர்கள் அல்ல… இவரது நல்ல குணங்களுக்காவும், பணிவிற்காகவும் சேர்ந்த ரசிகர்கள் தான் அதிகம். விளம்பரங்களுக்காக எந்த ஒரு செயலையும் செய்யாதவர். ஆட்டோக்காரர்கள் பலருக்கு வாழ்க்கை கொடுத்தவர் விஜய் தான்.

2009 ஆம் ஆண்டு தன் ரசிகர் மன்றம் அனைத்தையும் “மக்கள் இயக்கம்” என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். 2009 ஆம் ஆண்டு இவர் ட்டணி ஆதரித்த அதிமுக அரசு தமிழ அரியணை ஏறியது. இன்னமும் அரசியலில் முழுதாக நேரடி களம் காணாமல் பொறுமை காத்து வருகிறார்.

இவர் பெற்ற விருதுகளில் சில இதோ:

காதலுக்கு மரியாதை – தமிழக அரசு (சிறந்த நடிகர்)
திருப்பாச்சி – தமிழக அரசு (சிறந்த நடிகர்)
கில்லி – சென்னை கார்ப்பரேட் கிளப் விருது, தினகரன் விருது, பிலிம் டுடே விருது (சிறந்த நடிகர்)
போக்கிரி – அம்ரிதா மாத்ருபூமி விருது , இசை அருவி தமிழ் இசை விருது (சிறந்த நடிகர்)
வேட்டைக்காரன் – இசை அருவி தமிழ் இசைவிருது (சிறந்த நடிகர்)
துப்பாக்கி, நண்பன் – விகடன் விருது (சிறந்த நடிகர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *