‘தளபதி 61’ல் இசையமைப்பாளர் இவரா..???

vijay
விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘பைரவா’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். சில தினங்களுக்கு முன் இச்செய்தி உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.
இந்த படத்தினை இயக்கும் வாய்ப்பினை மீண்டும் அட்லீயே பெற்றுள்ளார்.

இந்த படத்தின் கதையில் விஜய்யின் பார்வைக்கேற்ப இயக்குநர் ராஜமெளலியின் தந்தை அவர்களால் சற்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு அட்லீயின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி தான் முதலில் இசையமைப்பார் என தகவல் வெளிவந்தது. ஆனால், தேணாண்டாள் நிறுவனம் இந்த படத்தினை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு ஏ ஆர் ரகுமானை இந்த படத்தில் இசையமைக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

விரைவில் இப்படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ முழு அறிவிப்பும் விரைவில் வெளிவர இருக்கிறதாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *