’தளபதி 61’ அப்டேட்: விஜய்க்கு மீண்டும் இவரே ஜோடி..??

விஜய் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைரவா’ வரும் பொங்கல் தின விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் சில தினங்களில் சென்னை திரும்பவுள்ளார். அதன் பிறகு, அட்லீயுடனான அடுத்த படத்தில் இணையவுள்ளார் விஜய்.

இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது ஸ்ரீ தேணாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். 70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளில் தான் படமாக்கப்படவிருக்கிறதாம்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம். தெறி படத்தில் இருவருடனான காதல் காட்சிகள் அதிகமாக பேசப்பட்டுள்ளதால் மீண்டும் இந்த கூட்டணியை சாத்தியமாக்கியுள்ளார் விஜய்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *