விஜய்யை பாராட்டிய விவேக்!

நடிகர் விஜய் கடந்த சில நாட்களாகவே சமூக பிரச்சனைகளில் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், பண மதிப்பிழப்பு தொடர்பான பேட்டி, அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் என மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் விஜய் அளித்த ஆதரவைக் குறிக்கும் விதமாக மீம் ஒன்று வெளியானது.

இது விஜய் ரசிகர்களிடையே பலத்த பாராட்டைப் பெற்றது. இதையடுத்து, இந்த மீமை முன்வைத்து நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது, ‘அன்பு விஜய் உங்கள் செயல் என் உள்ளத்தை உணர்ச்சிவசப்பட செய்கிறது. உங்கள் அக்கறைக்கும், கருணைக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.