மர்ம மனிதனால் விக்ரமுக்கு வந்த சோதனை!

Vikram In Trouble Due To Marma Manithan

பிரபல ​டைரக்டர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆனந்த் சங்கரை ‘அரிமா நம்பி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

கலைப்புலி என்றாலே பிரம்மாண்டம் தான். தற்போது அவர் கையில் வைத்திருக்கும் ரஜினி, விஜய் படங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

அரிமா நம்பியும் நல்ல ஒரு வெற்றியை பெற்றதால் அந்த டைரக்டருக்கே இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நினைத்து விக்ரமுக்கு கதை சொல்ல ஏற்பாடு செய்தார் தாணு. கதை கேட்ட விக்ரம் உடனே ஓகேவும் சொல்லிட்டார்.

இதைக் கேள்விப்பட்ட ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி செம டென்ஷனாகி,. ‘பீமா’ படத்துல நடிச்சிட்டு இருக்கும்போதே கருணாமூர்த்திகிட்ட ஒரு தொகைய அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் விக்ரம். ஆனா படம் நடித்து கொடுக்காமல் தள்ளிவைத்திருக்கிறார்.

இத்னால் தயாரிப்பாளர் சங்கத்தில் கருணாமூர்த்தி புகார் கொடுக்க ‘மர்ம மனிதன்’ படம் இவருக்கு வந்துவிட்டது.

ஆனால் அண்மையில வந்த ‘10 எண்றதுக்குள்ள’ படம் படு தோல்வியடைஞ்சத்தால ‘மர்ம மனிதன்’ படமே வேண்டாம் என ஓடியிருக்கிறார் கருணா. இந்த வேணும் வேண்டாம் விளையாட்டில் கொஞ்சம் திகைத்துத்தான் போனார் விக்ரம்.

பின்புதான் கைகொடுத்திருக்கிறார் ‘புலி’ படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம். ’மர்ம மனிதன்’ படத்தை அவர் தயாரிக்கவிருக்கிறார்.

ஐ படத்தின் ராசி ஐ படத்திலே முடிந்து விட்டதாக மிகவும் கவலையுடன் இருக்கும் விக்ரமுக்கு
தயாரிப்பாளர் தமீமின் ராசியாவது கைகொடுக்குமா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *