எய்தவன் – விமர்சனம்

Rating – 3/5

மெட்ராஸ் படத்தில் தனது தனித்துவமான நடிப்பினை நிரூபித்த கலையரசன், அதன் பிறகு அதே கண்கள் படத்தில் கண் தெரியாதவராக நடித்து அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.

இவர் நடிப்பில் தற்போது வித்தியாசமான கதைகளத்தோடு வெளிவர இருக்கிறது ‘எய்தவன்’.

ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் தான் கலையரசனின் குடும்பம். தனது தங்கையை ஒரு அங்கீகாரம் பெறாத மருத்துவக் கல்லூரியில் அதிகமான பணம் செலுத்தி சேர்த்து விடுகிறார்.

சில தினங்களுக்கு பிறகு தான் தெரிகிறது அந்த கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைக்காது என்று. இதனால் கலையரசன், தான் செலுத்திய பணத்தை திரும்ப கேட்கும் போது கல்லூரி நிர்வாகத்தின் எதிர்ப்பை சம்பாத்தித்துக் கொள்கிறார். விளைவு, தனது தங்கையை இழக்கிறார்.

மனம் உடைந்த கலையரசன், வில்லன்கள் மீது தனது அம்பை பாய்ச்சுகிறார். முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

சமூகத்தில் சமீபத்திய முக்கிய பிரச்னையை புகுத்தி பெர்ஃபெக்ட் த்ரில்லர் ஆக்கியதில் கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் சக்தி ராஜசேகரன்.

மிடில் கிளாஸ் பையனாக வரும் கலையரசனுக்கு கதைக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரம் தான். கல்லூரியில் தங்கையை சேர்க்க கலையரசன் படும் பாடு… அந்த இடத்தில் கைதட்டல் பெறுகிறார். அதுவும் இடைவெளியில் தங்கை இறந்ததற்கான ரகசியம் தெரிய வரும் வேளையில் கொடுக்கும் ரியாக்‌ஷன் செம.

க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடக்கும் சண்டை காட்சிகள் மிரட்டுகின்றன. படத்தின் நாயகி சாட்னாவிற்கு பெரிதான ஒரு ரோல் இல்லை என்றாலும் அழகாக வந்து செல்கிறார்.

வில்லனாக வரும் கெளதம் அமைதியான வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் மிரட்டி எடுத்திருக்கிறார். ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி, கிருஷ்ணா ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தின் மிகப்பெரிய பலம் என்று பார்த்தால் திரைக்கதை மட்டுமே. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற படபடப்புடனே கதையை நகர்த்திருப்பது சிறப்பு. வசனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

பின்னனி இசையும் படத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது.

கலையரசனை வைத்து சரியான அம்பை தான் எய்திருக்கிறார் இயக்குனர்.

எய்தவன் – வேக பாய்ச்சல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *